உமர் ஷரீஃப் — 441
36:13 அவர்களுக்கு அந்த ஊர்வாசிகளை உதாரணமாக எடுத்துச் சொல்வீராக! அவர்களிடம் தூதர்கள் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
36:14 அவர்களிடம் நாம் இருவரை அனுப்பியபோது ஆக, அவர்கள் அவ்விருவரையும் பொய்ப்பித்தனர். நாம் மூன்றாவது ஒருவர் மூலமாக (முந்திய இருவரை) பலப்படுத்தினோம். ஆக, (அந்த மூவரும்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்”.
36:15 அவர்கள் கூறினார்கள்: “எங்களைப் போன்ற மனிதர்களாகவே தவிர நீங்கள் இல்லை. இன்னும், ரஹ்மான் எதையும் (உங்கள் மீது) இறக்கவில்லை. நீங்கள் பொய் சொல்பவர்களாகவே தவிர இல்லை.”
36:16 (தூதர்கள்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள் என்று எங்கள் இறைவன் நன்கறிவான்.”
36:17 தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (உங்களை நிர்ப்பந்திப்பது) எங்கள் மீது கடமை இல்லை.
36:18 அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் உங்களை துர்ச்சகுனமாக கருதுகின்றோம். நீங்கள் விலகவில்லை என்றால் நிச்சயமாக நாங்கள் உங்களை கல்லால் எறி(ந்து கொன்று விடு)வோம். இன்னும், எங்களிடமிருந்து துன்புறுத்தும் தண்டனை நிச்சயமாக உங்களை வந்தடையும்.”
36:19 அவர்கள் கூறினார்கள்: உங்கள் துர்ச்சகுனம் உங்களுடன்தான். நீங்கள் (தெளிவாக அழகிய முறையில்) அறிவுறுத்தப்பட்டாலுமா (இப்படி மூடர்களாக நடப்பீர்கள்)? மாறாக, நீங்கள் வரம்பு மீறுகிற மக்கள் ஆவீர்கள்.
36:20 பட்டணத்தின் கடைக்கோடியில் இருந்து ஓர் ஆடவர் விரைந்து வந்தார். அவர் கூறினார்: “என் மக்களே! இந்த தூதர்களை நீங்கள் பின்பற்றுங்கள்.”
36:21 “உங்களிடம் அறவே கூலி கேட்காத (இந்த நல்ல)வர்களை பின்பற்றுங்கள். அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள் ஆவார்கள்.”
36:22 என்னைப் படைத்தவனை நான் வணங்காமல் இருப்பதற்கு எனக்கு என்ன நேர்ந்தது? அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
36:23 அவனை அன்றி (வேறு) தெய்வங்களை நான் எடுத்துக் கொள்வேனா! (அந்த) ரஹ்மான் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவற்றின் சிபாரிசு என்னை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து) எதையும் தடுக்காது. இன்னும், அவர்கள் என்னை காப்பாற்ற மாட்டார்கள்.
36:24 அப்போது (-அவற்றைக் கடவுளாக எடுத்துக் கொண்டால்) நிச்சயமாக நான் தெளிவான வழிகேட்டில்தான் சென்று விடுவேன்.
36:25 நிச்சயமாக நான் உங்கள் இறைவனை நம்பிக்கை கொண்டேன். ஆகவே, எனக்கு செவிசாயுங்கள்!
36:26 (அவருக்கு) கூறப்பட்டது: “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!” என்று. அவர் கூறினார்: “என் மக்கள் அறிய வேண்டுமே,
36:27 எனக்கு என் இறைவன் மன்னிப்பு வழங்கியதையும்; அவன் என்னை கண்ணியமானவர்களில் ஆக்கியதையும்!”