>

உமர் ஷரீஃப் — 390

28:36 ஆக, நமது தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் மூஸா வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இது (உம்மால்) இட்டுக்கட்டப்பட்ட சூனியமே தவிர இல்லை. இன்னும், எங்கள் முந்திய மூதாதைகளில் இதைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை.”

28:37 இன்னும், மூஸா கூறினார்: “என் இறைவனிடமிருந்து நேர்வழியை கொண்டுவந்தவரையும் யாருக்கு மறுமையின் (நல்ல) முடிவு ஆகிவிடுமோ அவரையும் அவன் நன்கறிந்தவன் ஆவான். நிச்சயமாக, (நிராகரிக்கின்ற) அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”

28:38 ஃபிர்அவ்ன் கூறினான்: “முக்கிய பிரமுகர்களே! என்னை அன்றி (வேறு) ஒரு கடவுளை உங்களுக்கு நான் அறியமாட்டேன். ஆக, ஹாமானே! குழைத்த களிமண்ணை நெருப்பூட்டி செங்கல்லாக செய். ஆக, முகடுள்ள ஓர் உயரமான கோபுரத்தை எனக்காக உருவாக்கு. நான் மூஸாவின் கடவுளை (வானத்தில்) தேடிப்பார்க்க வேண்டும். இன்னும், நான் அவரை பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறேன்.”

28:39 அவனும் அவனுடைய ராணுவங்களும் பூமியில் நியாயமின்றி (சத்தியத்தை ஏற்காமல்) பெருமையடித்தனர். இன்னும், நிச்சயமாக அவர்கள் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் என்று நினைத்தனர்.

28:40 ஆகவே, அவனையும் அவனுடைய ராணுவங்களையும் நாம் ஒன்றிணைத்து அவர்களை கடலில் எறிந்தோம். ஆக, (நபியே!) (நம்பிக்கையற்ற) அநியாயக்காரர்களின் முடிவு எப்படி இருந்தது என்று பார்ப்பீராக.

28:41 அவர்களை நரகத்தின் பக்கம் அழைக்கிற தலைவர்களாக ஆக்கினோம். மறுமை நாளில் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.

28:42 இவ்வுலகத்திலும் மறுமையிலும் தொடர்ச்சியாக சாபம் அவர்களை சேரும்படி செய்தோம். இன்னும், (கடுமையான தண்டனையால்) அவர்கள் இழிவுபடுத்தப்பட்டவர்களில் இருப்பார்கள்.

28:43 முந்திய தலைமுறையினர்களை நாம் அழித்த பின்னர் மக்களுக்கு ஒளியாகவும் நேர்வழியாகவும் கருணையாகவும் மூஸாவிற்கு நாம் திட்ட வட்டமாக வேதத்தைக் கொடுத்தோம், அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும் என்பதற்காக.