உமர் ஷரீஃப் — 387
28:14 அவர் தனது முழு வலிமையை அடைந்து, அவர் (அறிவு) முதிர்ச்சி பெற்றபோது (முந்திய நபிமார்களின் மார்க்கத்தைப் பற்றிய) ஞானத்தையும் (முந்திய வேதங்கள் பற்றிய) கல்வி அறிவையும் நாம் அவருக்கு தந்தோம். இன்னும், இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம்.
28:15 நகரவாசிகள் கவனமற்று இருந்த நேரத்தில் - மூஸா அந்த நகரத்தில் நுழைந்தார். ஆக, அவர் அ(ந்த நகரத்தின் ஒரு பகு)தி(யி)ல் இரு ஆடவர்களைக் கண்டார். அவ்விருவரும் சண்டை செய்தனர். இவர் அவருடைய பிரிவை சேர்ந்தவர். இன்னும், இவரோ அவருடைய எதிரிகளில் உள்ளவர். இவருடைய பிரிவைச் சேர்ந்தவன் தனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராக அவரிடம் உதவி கேட்டான். ஆக, மூஸா அவனுக்கு குத்து விட்டார். ஆக, அவனை முடித்து விட்டார். (பிறகு தான் செய்த தவறை உணர்ந்து அவர்) கூறினார்: “இது ஷைத்தானின் செயலில் உள்ளதாகும். நிச்சயமாக அவன் வழி கெடுக்கின்ற தெளிவான எதிரி ஆவான்.”
28:16 (மேலும்) அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கு தீங்கு இழைத்துக் கொண்டேன். ஆகவே, என்னை மன்னித்துவிடு.” ஆக, அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
28:17 (மேலும்) அவர் கூறினார்: “என் இறைவா! நீ (என்னை மன்னித்து) எனக்கு அருள்புரிந்து விட்டதால், குற்றவாளிகளுக்கு உதவுபவனாக (இனி ஒருக்காலும்) நான் இருக்கவே மாட்டேன்.”
28:18 ஆக, அந்த நகரத்தில் பயந்தவராக (செய்திகளை) எதிர் பார்த்தவராக (மறுநாள்) காலையை அவர் அடைந்தார். அப்போது நேற்று அவரிடத்தில் உதவி தேடிய (அவரது இனத்த)வன் (இன்றும் அவரிடம் உதவி தேடியவனாக) அவரை கத்தி அழைத்தான். அவனுக்கு மூஸா கூறினார்: “நிச்சயமாக நீ ஒரு தெளிவான மூடன் ஆவாய்.”
28:19 ஆக, அவர்கள் இருவருக்கும் எதிரியாக உள்ளவனை அவர் தண்டிக்க நாடியபோது (அவரை உதவிக்கு அழைத்தவன் மூஸா தன்னை கொல்ல நினைக்கிறார் என்று கருதி) அவன் கூறினான்: “மூஸாவே! நேற்று ஓர் உயிரை நீ கொன்றது போன்று நீ என்னை (இன்று) கொன்றுவிட நாடுகிறாயா? பூமியில் நீ அநியாயக்காரனாக (வன்முறையாளனாக) ஆகுவதைத் தவிர நீ நாடவில்லை. இன்னும், சீர்திருத்தவாதிகளில் நீ ஆகுவதை நீ நாடவில்லை.”
28:20 அந்த நகரத்தின் இறுதியிலிருந்து ஓர் ஆடவர் விரைந்தவராக வந்து கூறினார்: “மூஸாவே! (ஃபிர்அவ்னின்) பிரமுகர்கள் உம்மைக் கொல்வதற்கு உமது விஷயத்தில் ஆலோசிக்கிறார்கள். ஆகவே, நீர் வெளியேறிவிடும்! நிச்சயமாக நான் உமக்கு நன்மையை நாடுபவர்களில் இருக்கிறேன்.”
28:21 ஆக, அவர் (தனது குற்றத்தின் தண்டனையை) பயந்தவராக (தன்னைத் துரத்தி பிடிக்க வருபவர்களை) கண்காணித்தவராக அதிலிருந்து வெளியேறினார். அவர் கூறினார்: “என் இறைவா! அநியாயக்கார மக்களிடமிருந்து என்னை காப்பாற்று!”