உமர் ஷரீஃப் — 371
26:84 “இன்னும், பின்வருவோர்களில் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!”
26:85 “இன்னும், என்னை நயீம் சொர்க்கத்தின் வாரிசுகளில் ஆக்கிவிடுவாயாக!”
26:86 “இன்னும், என் தந்தைக்கு மன்னிப்பளிப்பாயாக! நிச்சயமாக அவர் வழி தவறியவர்களில் இருக்கிறார்.”
26:87 “இன்னும், மக்கள் எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே!”
26:88 “செல்வமும் ஆண் பிள்ளைகளும் பலனளிக்காத (அந்த மறுமை) நாளில்.”
26:89 “எனினும், யார் (சந்தேகமில்லாத) பாதுகாப்பான (நம்பிக்கை உள்ள) உள்ளத்தோடு அல்லாஹ்விடம் வந்தாரோ (அவர் தனது செல்வம் இன்னும் பிள்ளைகள் மூலம் பயன் பெறுவார்).”
26:90 இன்னும், சொர்க்கம் இறையச்சம் உள்ளவர்களுக்கு சமீபமாக்கப்படும்.
26:91 இன்னும், வழிகேடர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்.
26:92 இன்னும், அவர்களிடம் கேட்கப்படும்: “(அல்லாஹ்வை அன்றி) நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே?”
26:93 அல்லாஹ்வை அன்றி, (நீங்கள் வணங்கிய) அவை உங்களுக்கு உதவுமா? அல்லது, தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளுமா?
26:94 ஆக, அவையும் (-அந்த சிலைகளும் அவற்றை வணங்கிய) வழிகேடர்களும் ஒருவர் மேல் ஒருவர் அ(ந்த நரகத்)தில் எறியப்படுவார்கள்.
26:95 இன்னும், இப்லீஸின் இராணுவங்கள் அனைவரும் (அதில் தூக்கி எறியப்படுவார்கள்).
26:96 அவர்கள் அதில் தர்க்கித்தவர்களாக கூறுவார்கள்:
26:97 “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நாம் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தோம்,
26:98 உங்களை அகிலங்களின் இறைவனுக்கு சமமாக ஆக்கி (வணங்கி)யபோது.
26:99 எங்களை வழி கெடுக்கவில்லை குற்றவாளிகளைத் தவிர.
26:100 ஆக, பரிந்துரைப்பவர்களில் யாரும் எங்களுக்கு இல்லை.
26:101 இன்னும், உற்ற நண்பர்களில் யாரும் (எங்களுக்கு) இல்லை.
26:102 ஆக, (உலகத்திற்கு) ஒருமுறை திரும்பச்செல்வது எங்களுக்கு முடியுமாயின் நாங்கள் (அங்கு சென்று) நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்.”
26:103 நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
26:104 இன்னும், நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்.
26:105 நூஹுடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
26:106 அவர்களது சகோதரராகிய நூஹ் அவர்களுக்கு கூறியபோது, “நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்ச மாட்டீர்களா?”
26:107 “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.”
26:108 “ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!”
26:109 “இன்னும், இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர (மக்களிடம்) என் கூலி இல்லை.”
26:110 “ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!”
26:111 அவர்கள் கூறினார்கள்: “சாதாரணமானவர்கள் (மட்டும்) உம்மை பின்பற்றி இருக்க, நாம் உம்மை நம்பிக்கை கொள்வோமா?”