>

உமர் ஷரீஃப் — 349

23:105 எனது (குர்ஆனின்) வசனங்கள் (உலகத்தில்) உங்களுக்கு முன் ஓதப்பட்டு வந்தன அல்லவா? ஆனால், நீங்கள் அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்கள்.

23:106 அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா! எங்களது துர்பாக்கியம் எங்களை மிகைத்து விட்டது. இன்னும், நாங்கள் வழிகெட்ட மக்களாக இருந்தோம்.

23:107 எங்கள் இறைவா! எங்களை இ(ந்த நரகத்)திலிருந்து வெளியேற்றிவிடு! ஆக, (பாவங்களின் பக்கம்) நாங்கள் திரும்பச் சென்றால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்தான். (அப்போது நீ எங்களை கண்டிப்பாக தண்டிக்கலாம்.)

23:108 அவன் கூறுவான்: இ(ந்த நரகத்)தில் நீங்கள் (நிரந்தரமாக) இழிவுடன் தங்கி விடுங்கள். இன்னும், என்னிடம் பேசாதீர்கள்.

23:109 நிச்சயமாக விஷயமாவது, என் அடியார்களில் ஒரு கூட்டம், “எங்கள் இறைவா! நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, எங்களை மன்னித்து விடு! இன்னும், எங்கள் மீது கருணை புரி! நீயோ கருணை புரிபவர்களில் மிகச் சிறந்தவன்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.

23:110 ஆக, அவர்களை நீங்கள் கேலியாக எடுத்துக் கொண்டீர்கள். இறுதியாக, அவர்கள் என் நினைவை உங்களுக்கு மறக்க வைத்து விட்டார்கள். (அவர்களை கேலி செய்வதில் ஈடுபட்டு என்னை நீங்கள் மறந்து விட்டீர்கள்.) இன்னும், நீங்கள் அவர்களைப் பார்த்து (எப்போதும் கேலிசெய்து) சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.

23:111 அவர்கள் (உலகத்தில்) பொறுமையாக இருந்த காரணத்தால் இன்றைய தினம் நிச்சயமாக நான் அவர்களுக்கு கூலி கொடுத்தேன், “நிச்சயமாக அவர்கள்தான் (சொர்க்கத்தின்) பாக்கியம் பெற்றவர்கள்” என்று.

23:112 (அல்லாஹ்) கூறுவான்: பூமியில் நீங்கள் எத்தனை பல ஆண்டுகள் தங்கி இருந்தீர்கள்.

23:113 அவர்கள் கூறுவார்கள்: ஒரு நாள்; அல்லது, ஒரு நாளில் சில பகுதி தங்கி இருந்தோம். ஆக, (சரியாக) எண்ணக் கூடியவர்களிடம் நீ கேட்பாயாக!

23:114 அவன் கூறுவான்: நீங்கள் (பூமியில்) குறைவாகவே தவிர தங்கவில்லை. நீங்கள் (மறுமையில் தங்கப் போகும் காலத்தை) அறிந்திருக்க வேண்டுமே!

23:115 நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணாகத்தான் என்றும், நிச்சயமாக நீங்கள் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?

23:116 ஆக, அரசனாகிய, உண்மையான இறைவனாகிய, கண்ணியமிக்க அர்ஷுடைய அதிபதியாகிய அல்லாஹ் (இவர்களின் இழிவான வர்ணிப்பை விட்டும்) மிக உயர்ந்தவனாக இருக்கிறான். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை.

23:117 இன்னும், யார் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைப்பாரோ - அதற்கு அவரிடம் அறவே ஆதாரம் இல்லாமல் இருக்க - அவருடைய விசாரணையெல்லாம் அவரது இறைவனிடம்தான். நிச்சயமாக (அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க மறுக்கின்ற) நிராகரிப்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.

23:118 (நபியே!) கூறுவீராக! என் இறைவா! (என்னை) மன்னிப்பாயாக, இன்னும், (என் மீது) கருணை புரிவாயாக! நீதான் கருணை புரிபவர்களில் மிகச் சிறந்தவன்.