>

உமர் ஷரீஃப் — 345

23:43 எந்த ஒரு சமுதாயமும் தமது தவணையை முந்தவும் மாட்டார்கள். இன்னும், பிந்தவும் மாட்டார்கள்.

23:44 பிறகு, நாம் நமது தூதர்களை தொடர்ச்சியாக அனுப்பினோம். ஒரு சமுதாயத்திற்கு, அதன் தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களில் சிலரை தொடர்ந்து சிலரை அழித்தோம். இன்னும், அவர்க(ளின் செய்திக)ளை (பிற மக்களுக்கு) படிப்பினை நிறைந்த நிகழ்வுகளாக நாம் ஆக்கிவிட்டோம். ஆக, நம்பிக்கை கொள்ளாத மக்கள் அழிந்து போவார்கள்.

23:45 பிறகு, நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நமது அத்தாட்சிகளுடனும் தெளிவான ஆதாரத்துடனும் அனுப்பினோம்,

23:46 ஃபிர்அவ்னிடமும் அவனுடைய முக்கிய பிரமுகர்களிடமும். ஆக, அவர்கள் பெருமையடித்தனர். இன்னும், அவர்கள் (மக்கள் மீது) ஆதிக்கம் செலுத்தக்கூடிய (எல்லை மீறிய அநியாயக்கார) கூட்டமாக இருந்தனர்.

23:47 ஆக, அவர்கள் கூறினார்கள்: “எங்களைப் போன்ற மனித (இனத்தை சேர்ந்த இருவ)ர்களை நாங்கள் நம்பிக்கை கொள்வோமா? அவ்விருவரின் சமுதாயமோ எங்களுக்கு அடிபணிந்தவர்களாக இருக்கிறார்கள்.”

23:48 ஆக, அவ்விருவரையும் அவர்கள் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் அழிக்கப்பட்டவர்களில் ஆகிவிட்டனர்.

23:49 இன்னும், திட்டவட்டமாக மூஸாவிற்கு, – அவ(ருடைய சமுதாயமாகிய இஸ்ரவேல)ர்கள் நேர்வழி பெறுவதற்காக - நாம் வேதத்தைக் கொடுத்தோம்.

23:50 இன்னும், மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம். இன்னும், உறுதியான உயரமான சமமான இடத்திற்கும் ஓடுகின்ற நீரூற்றுக்கும் அவ்விருவரை நாம் ஒதுங்க வைத்தோம்.

23:51 தூதர்களே! நல்லவற்றிலிருந்து சாப்பிடுங்கள். இன்னும், நல்லதை செய்யுங்கள். நீங்கள் செய்வதை நிச்சயமாக நான் நன்கறிந்தவன் ஆவேன்.

23:52 நிச்சயமாக இதுதான் (நீங்கள் பின்பற்ற வேண்டிய) உங்கள் ஒரே மார்க்கமாகும். இன்னும், நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, என்னை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

23:53 ஆக, அவர்கள் தங்களது மார்க்கத்தை தங்களுக்கு மத்தியில் பல வேதங்களாக(வும் பல பிரிவுகளாகவும்) பிரித்துக் கொண்டனர். ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் உள்ளதைக் கொண்டு பெருமைப்படுகிறார்கள்.

23:54 ஆகவே, (நபியே!) அவர்களை அவர்களுடைய வழிகேட்டில் (சிறிது) காலம் வரை விடுவீராக!

23:55 (ஏகத்துவக் கொள்கையை பின்பற்றாத) அவர்கள் எண்ணுகிறார்களா?, நாம் அவர்களுக்கு செல்வத்திலிருந்தும் ஆண் பிள்ளைகளிலிருந்தும் எதைக் கொடுக்கிறோமோ,

23:56 அது அவர்களுக்கு நாம் நன்மைகளை விரைந்து செய்கிறோம் என்று (எண்ணுகிறார்களா?) மாறாக, அவர்கள் உ(ண்மையை புரிந்து)ணர மாட்டார்கள்.

23:57 நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனின் பயத்தால் நடுங்கி இருக்கிறார்களோ,

23:58 இன்னும், எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ,

23:59 இன்னும், எவர்கள் தங்கள் இறைவனுக்கு இணைவைக்கவில்லையோ,