>

உமர் ஷரீஃப் — 334

22:16 இன்னும், (-நமது வல்லமையை மறுத்தவருக்கு நமது அத்தாட்சிகளை விவரித்த) இவ்வாறே இ(ந்த வேதத்)தை (நமது வல்லமையை விவரிக்கிற) தெளிவான அத்தாட்சிகளாக நாம் (நபி முஹம்மதுக்கு) இறக்கினோம். மேலும், நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவருக்கு நேர்வழி காட்டுகிறான் (என்பதற்காகவும் அல்லாஹ் இந்த குர்ஆனை இறக்கினான்).

22:17 நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள், கிறித்தவர்கள், ஸாபியீன்கள், யூதர்கள், மஜூஸிகள் இன்னும், இணைவைத்தவர்கள் (ஆகிய) இவர்களுக்கு மத்தியில் மறுமைநாளில் நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இவர்களின் செயல்கள்) எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன் ஆவான். (அவனுக்கு எதுவும் மறைந்ததல்ல).

22:18 (நபியே!) நீர் பார்க்கவில்லையா, நிச்சயமாக அல்லாஹ், வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மலைகளும் மரங்களும் கால்நடைகளும் மக்களில் அதிகமானவர்களும் அவனுக்குத்தான் சிரம் பணிகிறார்கள். இன்னும், பலர் (அல்லாஹ்விற்கு சிரம் பணிவதில்லை. ஆகவே) அவர்களுக்கு தண்டனை உறுதியாகி விட்டது. இன்னும், எவரை அல்லாஹ் இழிவுபடுத்தினானோ அவரை கண்ணியப்படுத்துபவர் எவரும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதை செய்வான்.

22:19 (அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர், இன்னும், அவனை நிராகரித்தவர் ஆகிய) இவ்விருவரும் தங்கள் இறைவனின் விஷயத்தில் தர்க்கிக்கிறார்கள். ஆக, எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்பில் (பழுக்க சூடுகாட்டப்பட்ட செம்பிலிருந்து) ஆடைகள் செய்யப்படும். அவர்களின் தலைகளுக்கு மேலிருந்து கடுமையாக கொதிக்கின்ற சுடு நீர் ஊற்றப்படும்.

22:20 அதன் மூலம் அவர்களுடைய வயிறுகளில் உள்ளவை (எல்லாம்) உருக்கப்பட்டு விடும். இன்னும், (அவர்களுடைய) தோல்களும் (உருகி விடும்).

22:21 அவர்களுக்கு இரும்பு சம்மட்டிகள் (உடைய அடிகள்) உண்டு.

22:22 (அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின்) துக்கத்தினால் அ(ந்த நரகத்)திலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு நாடும்போதெல்லாம் அ(ந்த நரகத்)திலேயே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். இன்னும், (அவர்களை நோக்கி கூறப்படும்:) பொசுக்கக்கூடிய தண்டனையை சுவையுங்கள்.

22:23 நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகள் செய்தார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் தங்கத்தினாலான வளையல்களும் முத்து (ஆபரணமு)ம் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும், அவற்றில் அவர்களது ஆடை பட்டாக இருக்கும்.