உமர் ஷரீஃப் — 313
20:13 இன்னும், நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஆகவே, (உமக்கு) வஹ்யி அறிவிக்கப்படுபவற்றை செவிமடுப்பீராக!
20:14 நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, என்னை வணங்குவீராக! இன்னும், என் நினைவிற்காக தொழுகையை நிலைநிறுத்துவீராக!
20:15 நிச்சயமாக மறுமை (உண்மைதான். அது ஒரு நாள்) வரக்கூடியதாகும், - அதை (யாரும் அறியாதவாறு) நான் மறைத்து வைத்திருப்பேன், - ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்ததற்கு (அங்கு) கூலி கொடுக்கப்படுவதற்காக.
20:16 ஆக, அதை நம்பிக்கை கொள்ளாமல், தனது மன இச்சையை பின்பற்றியவன் அதை விட்டு உம்மை (தவறான பாதையின் பக்கம்) திருப்பிவிட வேண்டாம், நீர் அழிந்து விடுவீர்.
20:17 மூஸாவே! உமது வலக்கையில் உள்ள அது என்ன?”
20:18 அவர் கூறினார்: அது எனது கைத்தடி. அதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இன்னும், அதன் மூலம் என் ஆடுகளுக்கு இலைகளை பறிப்பேன். இன்னும், எனக்கு அதில் மற்ற பல தேவைகளும் உள்ளன.
20:19 அவன் கூறினான்: மூஸாவே! அதை நீர் எறிவீராக!
20:20 ஆக, அதை அவர் எறிந்தார். ஆக, அது விரைந்து ஓடுகின்ற ஒரு பாம்பாக ஆகிவிட்டது.
20:21 அவன் கூறினான்: அதைப் பிடிப்பீராக! பயப்படாதீர். நாம் அதை அதன் முந்திய தன்மைக்கே திருப்புவோம்.
20:22 இன்னும், உமது கரத்தை புஜத்தின் கீழ் சேர்த்து வைப்பீராக! (பிறகு நீர் அதை எடுக்கும்போது) அது (எவ்வித) நோயுமின்றி (பனிக்கட்டியைப் போன்று) வெண்மையாக வெளியே வரும். இது மற்றுமோர் அத்தாட்சியாகும்.
20:23 (மூஸாவே!) நமது பெரிய அத்தாட்சிகளில் இருந்து உமக்கு நாம் காண்பிப்பதற்காக (இவற்றைக் கொடுத்தோம்).
20:24 ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்புமீறி விட்டான்.
20:25 அவர் கூறினார்: என் இறைவா! எனக்கு என் நெஞ்சை விரிவாக்கு!
20:26 இன்னும், என் காரியத்தை எனக்கு இலகுவாக்கு!
20:27 இன்னும், கொன்னலை என் நாவிலிருந்து அவிழ்த்துவிடு![1] இயலாமையை போக்கிவிடு!)
20:28 அவர்கள் என் பேச்சை (தெளிவாக) புரிந்து கொள்வார்கள்.
20:29 இன்னும், என் குடும்பத்திலிருந்து எனக்கு ஓர் உதவியாளரை ஏற்படுத்து!
20:30 என் சகோதரர் ஹாரூனை (எனக்கு உதவியாளராக ஆக்கி வை)!
20:31 அவர் மூலம் எனது முதுகைப் பலப்படுத்து!
20:32 இன்னும், எனது (நபித்துவப்) பணியில் அவரை (என்னுடன்) இணைத்துவிடு!
20:33 நாங்கள் உன்னை அதிகம் துதிப்பதற்காக,
20:34 இன்னும், நாங்கள் உன்னை அதிகம் நினைவு கூர்வதற்காக (என் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்!).
20:35 நிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கின்றாய்.
20:36 அவன் கூறினான்: “மூஸாவே! உமது கோரிக்கையை நீர் கொடுக்கப்பட்டீர்.”
20:37 இன்னும், உம்மீது (இது அல்லாத) வேறு ஒரு முறையும் திட்டமாக நான் அருள் புரிந்திருந்தேன்,