>

உமர் ஷரீஃப் — 304

18:98 அவர் கூறினார்: “இது என் இறைவனிடமிருந்து கிடைத்த அருளாகும். ஆக, என் இறைவனின் (யுக முடிவு எனும்) வாக்கு வரும்போது அவன் இதைத் தூள் தூளாக்கிவிடுவான். இன்னும், என் இறைவனின் வாக்கு (முற்றிலும் நிகழக்கூடிய) உண்மையாக இருக்கிறது!”

18:99 இன்னும், அந்நாளில் சிலர் சிலருடன் (-ஜின்கள் மனிதர்களுடன்) கலந்துவிடும்படி விட்டுவிடுவோம். (இரண்டாவது முறையாக) சூரில் (எக்காளத்தில்) ஊதப்படும். ஆகவே, (விசாரணைக்காக உயிர் கொடுத்து) அவர்களை நிச்சயமாக ஒன்று சேர்ப்போம்.

18:100 இன்னும், நிச்சயமாக அந்நாளில் நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தை வெளிப்படுத்துவோம்.

18:101 அவர்களுடைய கண்கள் என் நல்லுபதேசங்களை (பார்ப்பதை) விட்டு திரைக்குள் இருந்தன. இன்னும், அவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற இயலாதவர்களாக இருந்தனர்.

18:102 நிராகரிப்பவர்கள் என்னை அன்றி என் அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ள எண்ணுகிறார்களா? நிச்சயமாக நாம், நிராகரிப்பவர்களுக்கு தங்குமிடங்களாக நரகத்தை தயார்படுத்தினோம்.

18:103 (நபியே) கூறுவீராக! “செயல்களால் மிகப் பெரிய நஷ்டவாளிகளை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?”

18:104 உலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சிகள் (எல்லாம்) வழிகெட்டு விட்டன. அவர்களோ நிச்சயமாக அவர்கள் நல்ல செயலை செய்கிறார்கள் என்று எண்ணுகிறார்கள்.

18:105 இவர்கள் எத்தகையோர் என்றால் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனுடைய சந்திப்பையும் நிராகரித்தார்கள். ஆகவே, அவர்களுடைய (நல்ல) செயல்கள் (அனைத்தும்) அழிந்து விட்டன. ஆகவே, அவர்களுக்காக மறுமை நாளில் எவ்வித எடையையும் நிறுத்த மாட்டோம். (அவர்களுக்கு எவ்வித மதிப்பும் மறுமையில் இருக்காது.)

18:106 அவர்கள் நிராகரித்ததாலும்; என் வசனங்களையும் என் தூதர்களையும் கேலியாக எடுத்துக் கொண்டதாலும் அவர்களுக்கு தயார் செய்யப்பட்ட அந்த கூலியானது நரகமாகும்.

18:107 நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு ‘ஃபிர்தவ்ஸ்’ என்னும் சொர்க்கங்கள் தங்குமிடங்களாக இருக்கும்.

18:108 அவற்றில் அவர்கள் நிரந்தரமானவர்களாக இருப்பார்கள். அதிலிருந்து (வேறு இடத்திற்கு) மாறுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

18:109 (நபியே!) கூறுவீராக: என் இறைவனின் (ஞானத்தையும் அறிவையும் விவரிக்கும்) வாக்கியங்களுக்கு கடல் (நீர்) மையாக மாறினால், என் இறைவனின் வாக்கியங்கள் தீர்ந்துவிடுவதற்கு முன்னதாகவே கடல் (நீர்) தீர்ந்துவிடும். அது (-அந்த கடல் நீர்) போன்று அதிகம் அதிகமாக நாம் (மைகளை) கொண்டு வந்தாலும் சரியே!

18:110 (நபியே) கூறுவீராக: “நிச்சயமாக நானெல்லாம் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், (-நீங்கள் வணங்குவதற்கு தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான் என்று எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுகிறது. ஆகவே, எவர் தன் இறைவனின் சந்திப்பை பயப்படுவாரோ அவர் நல்ல செயலைச் செய்யட்டும்! இன்னும், தன் இறைவனை வணங்குவதில் ஒருவரையும் (அவனுக்கு) இணையாக்க வேண்டாம்!”