உமர் ஷரீஃப் — 285
17:28 இன்னும், (மனிதனே!) நீ உம் இறைவனிடமிருந்து ஓர் அருளை நாடி, அதை ஆதரவு வைத்தவனாக இருக்கும் நிலையில் (யாராவது உன்னிடம் யாசித்து வரும்போது) அவர்களை நீ புறக்கணித்தால், அவர்களுக்கு மென்மையான சொல்லைச் சொல்! (அவர் மீது கடுகடுக்காதே!).
17:29 மேலும், (மனிதனே! தர்மம் செய்யாமல்) உனது கையை உன் கழுத்தில் விலங்கிடப்பட்டதாக ஆக்காதே! (செலவு செய்வதில்) அதை முற்றிலும் விரிக்காதே! அதனால் நீ பழிப்பிற்குரியவராக, (செல்வம் அனைத்தும்) தீர்ந்துபோனவராக தங்கிவிடுவாய்.
17:30 நிச்சயமாக உம் இறைவன், தான் நாடுகிறவருக்கு வாழ்வாதாரத்தை விரிவாக்குகிறான்; இன்னும், (தான் நாடுகிறவருக்கு) அளவாக (சுருக்கி)க் கொடுக்கிறான். நிச்சயமாக அவன், தன் அடியார்களை ஆழ்ந்தறிபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
17:31 (மனிதர்களே!) வறுமையைப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். நாம்தான் அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறோம். நிச்சயமாக அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாக இருக்கிறது.
17:32 (மனிதர்களே!) விபச்சாரத்தை நெருங்காதீர்கள்! நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கிறது. இன்னும், அது கெட்ட வழியாக இருக்கிறது.
17:33 மேலும், அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை உரிமையின்றி கொல்லாதீர்கள். இன்னும், எவர் அநீதி செய்யப்பட்டவராக கொல்லப்பட்டாரோ, (அவருக்காக பழிக்குப் பழி வாங்கும்) அதிகாரத்தை அவருடைய உறவினருக்கு நாம் ஆக்கினோம். ஆகவே, அவர் (-அந்த உறவினர் பழிக்குப்பழி) கொல்வதில் அளவு கடக்க வேண்டாம். நிச்சயமாக அவர் (-கொல்லப்பட்டவரின் உறவினர்) உதவி செய்யப்பட்டவராக இருக்கிறார்.[1]
17:34 இன்னும், அனாதையின் செல்வத்தை அவர் தன் வாலிபத்தை அடையும் வரை மிக அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள். மேலும், உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக உடன்படிக்கை (குறித்து மறுமையில்) விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கிறது.
17:35 இன்னும், நீங்கள் (பொருள்களை) அளந்(து கொடுத்)தால் (அந்த) அளவையை முழுமையாக்குங்கள்; இன்னும், சரியான (நீதமான) தராசைக் கொண்டு (பொருள்களை) நிறு(த்துக் கொடு)ங்கள். அது மிகச் சிறந்ததும் முடிவால் மிக அழகியதும் ஆகும்.
17:36 இன்னும், உனக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதைப் பின் தொடராதே! (அதைச் செய்யாதே). நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய இவை எல்லாம் அவற்றைப் பற்றி விசாரிக்கப்படுபவையாக இருக்கின்றன.
17:37 இன்னும், பூமியில் கர்வம் கொண்டவனாக நடக்காதே. நிச்சயமாக நீ பூமியை அறவே கிழிக்கவும் முடியாது. இன்னும், நீ மலைகளின் உயரத்தை அறவே அடையவும் முடியாது.
17:38 இவையெல்லாம், இவற்றின் தீமை உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது.