>

உமர் ஷரீஃப் — 281

16:119 பிறகு, (தூதரே!) நிச்சயமாக உம் இறைவன், - எவர்கள் அறியாமையின் காரணமாக கெட்டதைச் செய்து, அதற்கு பின்னர் அதிலிருந்து திருந்தி, மன்னிப்புக்கேட்டு, (தங்களை) சீர்படுத்தி கொண்டார்களோ அவர்களுக்கு நிச்சயமாக உம் இறைவன் அ(வர்கள் திருந்திய)தற்குப் பின்னர் (அவர்களை) மன்னிப்பவனாகவும் (அவர்கள் மீது) கருணைபுரிபவனாகவும் இருக்கிறான்.

16:120 நிச்சயமாக இப்ராஹீம் நன்மையை போதிப்பவராக, அல்லாஹ்விற்கு மிக பணிந்தவராக, இஸ்லாமிய கொள்கையில் உறுதியுடையவராக இருந்தார். இன்னும் அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.

16:121 அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார். அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்தான். இன்னும், நேரான பாதையில் அவரை அவன் நேர்வழி செலுத்தினான்.

16:122 மேலும், இவ்வுலகில் அவருக்கு அழகிய கூலியை கொடுத்தோம். இன்னும், நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் உள்ளவர் ஆவார்.

16:123 பிறகு, (நபியே!) நீர் இஸ்லாமியக் கொள்கையில் உறுதியுடையவராக இருக்கின்ற நிலையில் இப்ராஹீமின் மார்க்கத்தை பின்பற்றுவீராக என்று உமக்கு வஹ்யி அறிவித்தோம். இன்னும், அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.

16:124 சனிக்கிழமையை(க் கண்ணியப்படுத்துவது கடமையாக) ஆக்கப்பட்டதெல்லாம், அதில் (தங்கள் நபியிடம்) கருத்து வேறுபாடு கொண்டவர்கள் மீதுதான். மேலும், நிச்சயமாக உம் இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கிடையில், அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவற்றில் தீர்ப்பளிப்பான்.

16:125 (நபியே!) ஞானம்; இன்னும், அழகிய உபதேசத்தின் மூலம் உம் இறைவனுடைய பாதையின் பக்கம் (மக்களை) அழைப்பீராக! மேலும், மிக அழகிய முறையில் அவர்களிடம் தர்க்கிப்பீராக! நிச்சயமாக உம் இறைவன், - அவனுடைய பாதையிலிருந்து யார் வழி தவறினாரோ அவரை - மிக அறிந்தவன் ஆவான். இன்னும், நேர்வழிபெற்றவர்களையும் அவன் மிக அறிந்தவன் ஆவான்.

16:126 (நம்பிக்கையாளர்களே! உங்களை தாக்கியவர்களை) நீங்கள் தண்டித்தால் (வரம்பு மீறாமல்) நீங்கள் தண்டிக்கப்பட்டது போன்றே தண்டியுங்கள். நீங்கள் பொறு(மையாக இருந்து அவர்களை மன்னி)த்தால் அதுதான் பொறுமையாளர்களுக்கு மிக நல்லது!

16:127 (நபியே!) பொறுமையாக இருப்பீராக. மேலும், அல்லாஹ்விற்காகவே தவிர உம் பொறுமை இல்லை. மேலும், அவர்கள் மீது கவலைப்படாதீர்! இன்னும், அவர்கள் சூழ்ச்சி செய்வதைப் பற்றி (மன) நெருக்கடியில் நீர் ஆகிவிடாதீர்.

16:128 நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களுடனும், நல்லறம் புரிபவர்களுடனும் இருக்கிறான்.