>

உமர் ஷரீஃப் — 269

16:15 இன்னும், பூமியில் - அது உங்களை அசைத்துவிடாமல் இருப்பதற்காக மலைகளை ஊன்றினான். இன்னும், (உங்கள் நீர் தேவைகளுக்காக) நதிகளையும்; இன்னும், நீங்கள் (உங்கள் இலக்குகளை அடைய) சரியான வழியில் செல்வதற்காக பாதைகளையும் அவன் அமைத்(து கொடுத்)தான்.

16:16 இன்னும், (பகலில் நீங்கள் செல்லும் திசைகளை அறிய மலைகள் போன்ற) பல அடையாளங்களை அமைத்தான். இன்னும், (இரவில் பயணம் செய்யும்போது) அவர்கள் நட்சத்திரங்கள் மூலம் பாதைகளை அறிகிறார்கள்.

16:17 ஆக, (இவற்றை எல்லாம்) படைப்பவன், (எதையுமே) படைக்காதவன் போல் ஆவானா? (இருவரும் சமமானவர்களா?) ஆக, நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?

16:18 மேலும், அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை நீங்கள் எண்ணி முடிக்க மாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.

16:19 நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் நன்கறிவான்.

16:20 மேலும், அல்லாஹ்வையன்றி எவர்களை இவர்கள் அழைக்கிறார்களோ (-வணங்குகிறார்களோ) அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களோ (மனிதர்களால்) உருவாக்கப்படுகிறார்கள்.

16:21 (அல்லாஹ்வை அன்றி வணங்கப்படுகின்ற இந்த சிலைகள்) இறந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்லர். இன்னும், (தாம்) எப்போது (மறுமையில்) எழுப்பப்படுவோம் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.

16:22 (நீங்கள் வணங்கத்தகுதியான) உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆக, எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களுடைய உள்ளங்கள் (அந்த உண்மையான இறைவனை) நிராகரிக்கின்றன. இன்னும், அவர்கள் (உண்மையான இறைவனை ஏற்காமல்) பெருமையடிக்கிறார்கள்.

16:23 நிச்சயமாக உண்மையில் அல்லாஹ் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான். நிச்சயமாக அவன் பெருமையடிப்பவர்களை நேசிக்கமாட்டான்.

16:24 “மேலும், உங்கள் இறைவன் என்ன இறக்கினான்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “முன்னோரின் கட்டுக்கதைகள்” என்று கூறுகிறார்கள்.

16:25 இதன் காரணமாக, மறுமை நாளில் அவர்கள் தங்கள் (பாவச்)சுமைகளை முழுமையாக சுமப்பார்கள். இன்னும், எவர்களை கல்வியின்றி இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் (பாவச்) சுமைகளிலிருந்தும் சுமப்பார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டதாகும்.

16:26 திட்டமாக இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சி செய்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களின் கட்டடத்திற்கு அடித்தளங்களில் இருந்து (தண்டனையை கொண்டு) வந்தான். ஆக, அவர்களுக்கு மேலிருந்து (அவர்கள் எழுப்பிய மாளிகையின்) முகடு அவர்கள் மீது விழுந்தது. இன்னும், அவர்கள் அறியாத விதத்தில் (அல்லாஹ்வின்) தண்டனை அவர்களுக்கு வந்தது.