உமர் ஷரீஃப் — 232
11:89 “என் மக்களே! (உங்களுக்கு) என் மீதுள்ள பகைமை நூஹ் உடைய மக்களை; அல்லது, ஹூத் உடைய மக்களை; அல்லது, ஸாலிஹ் உடைய மக்களை அடைந்தது போன்று (ஒரு தண்டனை) உங்களையும் வந்தடைவதற்கு உங்களை நிச்சயம் தூண்ட வேண்டாம். இன்னும், (தலைக்கீழாக புரட்டப்பட்ட) லூத்துடைய மக்களும் உங்களுக்குத் தூரமாக இல்லை.
11:90 இன்னும், உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். பிறகு, (வருந்தி, பாவங்களை விட்டு) திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் பெரும் கருணையாளன், அதிகம் அன்பு வைப்பவன்.”
11:91 அவர்கள் கூறினார்கள்: “ஷுஐபே! நீர் கூறுவதில் பலவற்றை நாம் விளங்க (முடிய)வில்லை. இன்னும், நிச்சயமாக நாம் உம்மை எங்களில் பலவீனராகக் காண்கிறோம். இன்னும், உம் குடும்பத்தார்கள் இல்லாவிடில் உம்மைக் கல் எறிந்தே கொன்றிருப்போம். இன்னும், நீர் நம்மிடம் மதிப்புடையவராகவும் இல்லை.”
11:92 அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை விட என் குடும்பதார்களா உங்களிடம் மதிப்புடையவர்கள்? நீங்கள் அவனை உங்களுக்குப் பின்னால் எறியப்பட்டவனாக எடுத்துக் கொண்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் நீங்கள் செய்பவற்றைச் சூழ்ந்தறிபவன் ஆவான்.”
11:93 “இன்னும், என் மக்களே! நீங்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ப செயல்களை செய்யுங்கள், நிச்சயமாக நான் (என் தகுதிக்கு ஏற்ப) செயல்களை செய்கிறேன். யாருக்கு, - அவரை இழிவுபடுத்தும் - தண்டனை வரும்; இன்னும், யார் பொய்யர் என்பதை (விரைவில்) அறிவீர்கள். இன்னும், எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவன் ஆவேன்.”
11:94 நம் கட்டளை வந்தபோது ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நமது அருளினால் பாதுகாத்தோம். இன்னும், அநியாயம் செய்தவர்களை (பயங்கர) சப்தம் பிடித்தது. ஆக, (அவர்கள்) காலையில் தங்கள் இல்லங்களில் இறந்தவர்களாக ஆகிவிட்டனர்.
11:95 அவற்றில் அவர்கள் வசிக்காததைப் போல் ஆகிவிட்டனர். ‘ஸமூத்’ அழிந்தது போன்று ‘மத்யன்’ (வாசிகளு)க்கும் அழிவுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
11:96 திட்டவட்டமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடனும் தெளிவான அத்தாட்சியுடனும் அனுப்பினோம்,
11:97 ஃபிர்அவ்ன்; இன்னும், அவனுடைய பிரமுகர்களிடம். ஆக, அவர்கள் ஃபிர்அவ்னின் கட்டளையை பின்பற்றினார்கள். ஆனால், ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நல்லறிவுடையதாக இல்லை.