உமர் ஷரீஃப் — 224
11:20 அவர்கள் பூமியில் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்துபவர்களாக இருக்கவில்லை. இன்னும், அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தண்டனை பன்மடங்காக்கப்படும். (இவ்வுலகில்) அவர்கள் (உண்மையை) செவியேற்க சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. இன்னும், அவர்கள் (படிப்பினை பெறுகின்ற பார்வையால் இறை அத்தாட்சியைப்) பார்ப்பவர்களாகவும் இருக்கவில்லை.
11:21 அவர்கள் தங்களுக்குத் தாமே நஷ்டம் விளைவித்தவர்கள். இன்னும், அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை (-அவர்கள் வணங்கிய சிலைகள் இறுதியாக) அவர்களை விட்டு மறைந்துவிடும்.
11:22 சந்தேகமின்றி நிச்சயமாக அவர்கள்தான் மறுமையில் மகா நஷ்டவாளிகள்.
11:23 நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைகொண்டு, நற்செயல்களைச் செய்து, தங்கள் இறைவனின் பக்கம் மிக்க பயத்துடனும் பணிவுடனும் திரும்பினார்களோ அவர்கள்தான் சொர்க்கவாசிகள், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
11:24 (இந்த) இரு பிரிவினரின் உதாரணம் குருடன், செவிடன்; இன்னும், பார்ப்பவன், செவியுறுபவனைப் போன்றாகும். இரு பிரிவினர்களும் சமமாவார்களா? நீங்கள் (இந்த வேதத்தை சிந்தித்து) நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?
11:25 திட்டவட்டமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் அனுப்பினோம். (அவர் கூறியதாவது:) “நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.”
11:26 “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் துன்புறுத்தக்கூடிய நாளின் தண்டனையை உங்கள் மீது பயப்படுகிறேன்.”
11:27 ஆக, அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த பிரமுகர்கள் கூறினார்கள்: “எங்களைப் போன்ற ஒரு மனிதனாகவே தவிர, உம்மை நாம் (தூதராக) கருதவில்லை. இன்னும், (எங்கள்) வெளிப்படையான அறிவின்படி எங்களில் மிக இழிவானவர்களாக இருப்பவர்களே தவிர (உயர்ந்தவர்கள் எவரும்) உம்மைப் பின்பற்றுவதை நாம் பார்க்கவில்லை. இன்னும், எங்களை விட உங்களுக்கு எவ்வித மேன்மையும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக, நாங்கள் உங்களை பொய்யர்களாக கருதுகிறோம்.”
11:28 (நூஹ்) கூறினார்: “என் மக்களே! நீங்கள் (எனக்கு) அறிவியுங்கள், என் இறைவனிடமிருந்து (கொடுக்கப்பட்ட) ஒரு தெளிவான அத்தாட்சியின் மீது நான் இருக்கிறேன். இன்னும், அவன் தன்னிடமிருந்து அருளை எனக்கு அளித்திருக்கிறான். ஆக, இவை (எல்லாம்) உங்களுக்கு மறைக்கப்பட்டுவிட்டால், நீங்களும் அவற்றை வெறுப்பவர்களாக இருக்கும் நிலையில் அவற்றை (நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி) உங்களை நாம் நிர்ப்பந்திப்போமா?”