உமர் ஷரீஃப் — 220
10:98 ஆக, ஓர் ஊர் (வாசிகள்) நம்பிக்கை கொண்டு அவர்களின் நம்பிக்கை அவர்களுக்கு பலனளித்திருக்கக்கூடாதா! எனினும் ‘யூனுஸ்’ உடைய சமுதாயம், நம்பிக்கை கொண்டபோது உலக வாழ்க்கையில் இழிவான தண்டனையை அவர்களை விட்டு நீக்கினோம். இன்னும், ஒரு காலம் வரை அவர்களுக்கு சுகமான வாழ்வளித்தோம்.
10:99 உம் இறைவன் நாடினால், பூமியிலுள்ளவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆக, (நபியே!) நீர் மக்களை, - அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகுவதற்காக - நிர்ப்பந்திப்பீரா?
10:100 ஓர் ஆன்மாவிற்கு, அது நம்பிக்கை கொள்வது அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர சாத்தியமாகாது. சிந்தித்து புரியாதவர்கள் மீது தண்டனையை அல்லாஹ் ஆக்கிவிடுகிறான்.
10:101 (நபியே!) கூறுவீராக! “வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை கவனியுங்கள். நம்பிக்கை கொள்ளாத சமுதாயத்திற்கு வசனங்களும், எச்சரிப்பாளர்களும் பலனளிக்க மாட்டார்கள்.”
10:102 ஆக, அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களின் நாள்களைப் போன்றதைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? “நீங்கள் (உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பை) எதிர்பாருங்கள்; நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்” என்று (நபியே) கூறுவீராக.
10:103 பிறகு, நம் தூதர்களையும் நம்பிக்கை கொண்டவர்களையும் நாம் பாதுகா(த்துவிட்டு நிராகரிப்பாளர்களை அழி)ப்போம். இவ்வாறே, (உம்மையும் உம்முடன்) நம்பிக்கை கொண்டவர்களை(யும்) நாம் பாதுகாப்போம். இது நம்மீது கடமையாகும்.
10:104 (நபியே!) கூறுவீராக! “மக்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால், அல்லாஹ்வை அன்றி நீங்கள் எவர்களை வணங்குகிறீர்களோ அவர்களை நான் வணங்க மாட்டேன். எனினும், உங்கள் உயிரைக் கைப்பற்றுகின்ற (ஆற்றல் உடைய) அல்லாஹ்வைத்தான் வணங்குவேன். இன்னும், நம்பிக்கையாளர்களில் நான் ஆகவேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளேன்.”
10:105 இன்னும், (நபியே!) நீர் ஓர் இறையை வணங்குவதில் உறுதியானவராக (இணைவைப்பை விட்டும் முற்றிலும் விலகியவராக) மார்க்கத்தின் மீது உம் முகத்தை நிலை நிறுத்துவீராக! இன்னும், இணைவைப்பவர்களில் ஒருபோதும் நீர் ஆகிவிடாதீர்!
10:106 இன்னும், அல்லாஹ்வை அன்றி உமக்கு பலனளிக்காதவற்றையும் உமக்குத் தீங்களிக்காதவற்றையும் (நபியே!) நீர் அழைக்காதீர்! ஆக, நீர் (அல்லாஹ் அல்லாதவருக்கு வணக்க வழிபாடு) செய்து விட்டால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்.