உமர் ஷரீஃப் — 216
10:62 அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் நண்பர்கள், - அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; இன்னும், அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
10:63 அவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், அவனை அஞ்சுபவர்களாக இருப்பார்கள்.
10:64 உலக வாழ்க்கையிலும், இன்னும் மறுமை வாழ்க்கையிலும் அவர்களுக்கே நற்செய்தி உண்டு. அல்லாஹ்வுடைய வாக்குகளில் மாற்றம் அறவே இல்லை. இதுதான் மகத்தான வெற்றியாகும்.
10:65 (நபியே!) இன்னும், அவர்களுடைய (தீய) சொல் உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்விற்கு உரியன! அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
10:66 அறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் உள்ளவர்களும்; இன்னும், பூமியில் உள்ளவர்களும் நிச்சயமாக அல்லாஹ்விற்குரியவர்களே. அல்லாஹ்வை அன்றி (அவனுக்கு இணையாக கற்பனை செய்யப்பட்ட) தெய்வங்களிடம் பிரார்த்திப்பவர்கள் எதைப் பின்பற்றுகிறார்கள்? சந்தேகத்தைத் தவிர அவர்கள் (உறுதியான உண்மையை) பின்பற்றுவதில்லை. இன்னும், அவர்கள் (வீணான) கற்பனை செய்பவர்களாகவே தவிர (உண்மையான ஆதாரங்களை ஏற்பவர்களாக) இல்லை!
10:67 அவன்தான் உங்களுக்கு இரவை, நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காகவும்; இன்னும், பகலை பார்க்கக்கூடிய (வெளிச்சமுள்ள)தாகவும் ஆக்கினான். (அவனுடைய வசனங்களுக்கு) செவிசாய்க்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஏராளமான) அத்தாட்சிகள் உள்ளன.
10:68 அல்லாஹ் (தனக்கு) ஒரு குழந்தையை ஏற்படுத்திக் கொண்டான் என்று (சிலர்) கூறுகிறார்கள். அவனோ மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததிகளை விட்டு) மிகவும் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. இ(வ்வாறு கூறுவ)தற்கு உங்களிடம் எந்த ஓர் ஆதாரமும் இல்லை. நீங்கள் (ஆதாரத்துடன்) அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக இட்டுகட்டி) கூறுகிறீர்களா?
10:69 (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”
10:70 இவ்வுலகில் (அவர்களுக்கு அற்ப) சுகம் (உண்டு). பிறகு, நம்மிடமே அவர்களுடைய மீளுமிடம் இருக்கிறது. பிறகு, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக கடினமான தண்டனையை அவர்கள் சுவைக்கும்படி செய்வோம்.