உமர் ஷரீஃப் — 207
9:123 நம்பிக்கையாளர்களே! உங்களை அடுத்திருக்கின்ற நிராகரிப்பாளர்களிடம் போரிடுங்கள். இன்னும், அவர்கள் உங்களிடம் கடுமையை உணரட்டும். நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
9:124 இன்னும், ஓர் அத்தியாயம் (புதிதாக) இறக்கப்பட்டால், “உங்களில் எவருக்கு இது நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று கேட்பவர் அவர்களில் இருக்கிறார்கள். ஆக, நம்பிக்கை கொண்டவர்கள் அவர்களோ (இறக்கப்பட்ட அத்தியாயத்தைக் கொண்டு) மகிழ்ச்சியடைந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு (இது) நம்பிக்கையை அதிகப்படுத்தியது.
9:125 ஆக, எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கு அவர்களுடைய அசுத்தத்துடன் ஒரு அசுத்தத்தையே அது அதிகப்படுத்தியது! அவர்களோ நிராகரிப்பாளர்களாக இருக்கும் நிலையில்தான் இறப்பார்கள்.
9:126 ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ நிச்சயமாக அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? பிறகும், அவர்கள் திருந்துவதுமில்லை. இன்னும், அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.
9:127 இன்னும், ஓர் அத்தியாயம் (புதிதாக) இறக்கப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை (விரைக்கப்) பார்க்கிறார்களா? “உங்களை யாரும் பார்க்கின்றனரா?” என்று (கேட்டு விட்டு) பின்னர், (அங்கிருந்து) திரும்பி சென்று விடுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறிய முயற்சிக்காத மக்களாக இருக்கும் காரணத்தால், அல்லாஹ்(வும்) அவர்களுடைய உள்ளங்களை (நம்பிக்கை கொள்வதிலிருந்து) திருப்பி விட்டான்.
9:128 (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் சிரமப்படுவதை தன் மீது கடினமாக உணரக்கூடிய; உங்கள் மீது அதிக பற்றுடைய; நம்பிக்கையாளர்கள் மீது பெரிதும் இரக்கமுள்ள; அதிகம் கருணையுள்ள தூதர் உங்களிலிருந்தே உங்களிடம் வந்து விட்டார்.
9:129 (நபியே) ஆக, அவர்கள் (உம்மை விட்டு புறக்கணித்து) விலகி சென்றால், “எனக்குப் போதுமானவன் அல்லாஹ்தான்; அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை; அவன் மீதே நான் நம்பிக்கை வைத்து (அவனையே சார்ந்து) விட்டேன்; இன்னும், அவன் மகத்தான ‘அர்ஷின்’ அதிபதி” என்று கூறுவீராக!