உமர் ஷரீஃப் — 186
8:70 நபியே! கைதிகளில் உங்கள் கரங்களில் (உங்கள் கட்டுப்பாட்டில்) உள்ளவர்களுக்கு கூறுவீராக: “உங்கள் உள்ளங்களில் நல்ல (எண்ணத்)தை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து எடுக்கப்பட்டதை விட சிறந்ததை உங்களுக்குக் கொடுப்பான். இன்னும், உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.”
8:71 (நபியே!) ஆனால், அவர்கள் உமக்கு மோசடி செய்ய நாடினால் (இதற்கு) முன்னர் அவர்கள் அல்லாஹ்விற்கு(ம்) மோசடி செய்துள்ளனர். ஆகவே, அவர்கள் மீது (அல்லாஹ் உங்களுக்கு) ஆதிக்கமளித்தான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
8:72 நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, (தங்கள் ஊரை விட்டு வெளியேறி) ஹிஜ்ரத் சென்று, அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருள்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தவர்கள்; இன்னும், (இவர்களை) அரவணைத்து, உதவியவர்கள் இவர்கள், - இவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள் ஆவர். இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு; ஆனால், ஹிஜ்ரத் செல்லவில்லையோ அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் வரை எந்த ஒரு காரியத்திற்கும் அவர்களுக்காக பொறுப்பேற்பது உங்களுக்கு ஆகுமானதல்ல. இன்னும், மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவிதேடினால் (அவர்களுக்கு) உதவுவது உங்கள் மீது கடமையாகும். (எனினும்,) உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உடன்படிக்கை உள்ள ஒரு சமுதாயத்திற்கு எதிராக தவிர. (உடன்படிக்கை செய்தவர்களுக்கு எதிராக உதவுவது ஆகுமானதல்ல.) அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
8:73 இன்னும், நிராகரிப்பவர்கள் - அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள் ஆவார்கள். நீங்கள் அதை செய்யவில்லையென்றால் (நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவவில்லையென்றால்), பூமியில் குழப்பமும் (இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக) பெரும் கலகமும் ஆகிவிடும்.
8:74 ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் சென்று, அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்தார்களோ; இன்னும், (அவர்களை) அரவணைத்து உதவி செய்தார்களோ அவர்கள்தான் உண்மையில் நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான உணவும் உண்டு.
8:75 இன்னும், எவர்கள் (இவர்களுக்கு) பின்னர் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் சென்று, உங்களுடன் சேர்ந்து (உங்கள் எதிரிகளிடம்) போர் புரிந்தார்களோ அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள்தான். இன்னும், அல்லாஹ்வின் வேதத்தில் இரத்த பந்தங்கள் - அவர்களில் சிலர் சிலருக்கு - நெருக்கமானவர்கள் (-உரிமை உள்ளவர்வர்கள்) ஆவார்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.