>

உமர் ஷரீஃப் — 184

8:53 அதற்குக் காரணமாகும், நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்தின் மீது, தான் அருள்புரிந்த அருட்கொடையை - அவர்கள் தங்களிடம் உள்ளதை மாற்றும் வரை - மாற்றுபவனாக இல்லை என்பதும் இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் (ஆவான். ஆகவே, அடியார்களின் செயல்களுக்கு ஏற்ப கூலி கொடுக்கிறான்) என்பதும் ஆகும்.

8:54 ஃபிர்அவ்னுடைய சமுதாயம் இன்னும் அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் நிலைமையைப் போன்று (இவர்களின் நிலைமை இருக்கிறது). அவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களினால் அவர்களை அழித்தோம். இன்னும், ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தை மூழ்கடித்தோம். இன்னும், (இவர்கள்) எல்லோரும் அநியாயக்காரர்களாக இருந்தனர்.

8:55 நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களில் (எல்லாம்) மிகக் கொடியவர்கள், எவர்கள் (மன முரண்டாக) நிராகரித்தார்களோ அவர்கள்தான். ஆக, அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.

8:56 நீர் அவர்களிடம் உடன்படிக்கை செய்தீர்கள். பிறகு, அவர்கள் தங்கள் உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறிக்கிறார்கள். இன்னும், அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை.

8:57 ஆக, போரில் நீர் அவர்களைப் பெற்றுக் கொண்டால் அவர்களை (தண்டிப்பதை)க் கொண்டு அவர்களுக்குப் பின்னுள்ளவர்களை விரட்டியடிப்பீராக, அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக.

8:58 இன்னும், (உம்முடன் உடன்படிக்கை செய்த) சமுதாயத்திடமிருந்து மோசடியை நீர் பயந்தால், (அதற்குச்) சமமாக (அந்த ஒப்பந்தத்தை) நீர் அவர்களிடம் எறிந்து விடுவீராக. (அவர்களுடன் செய்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துவிடுவீராக!) நிச்சயமாக அல்லாஹ், மோசடிக்காரர்களை நேசிக்க மாட்டான்.

8:59 நிராகரித்தவர்கள் தாங்கள் முந்திவிட்டதாக (அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்துவிட்டதாக) ஒருபோதும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மை) பலவீனப்படுத்த முடியாது.

8:60 இன்னும், அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்திலிருந்தும், போர் குதிரைகளில் இருந்தும் உங்களுக்கு முடிந்ததை ஏற்பாடு செய்யுங்கள். அதன்மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும் (நீங்கள் அறியாத) அவர்கள் அல்லாத (பகைமையை மறைத்திருக்கும்) மற்றவர்களையும் நீங்கள் அச்சுறுத்த வேண்டும். நீங்கள் அவர்களை அறிய மாட்டீர்கள், அல்லாஹ் அவர்களை அறிவான். இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் பொருள்களில் எதை தர்மம் செய்தாலும் அ(தற்குரிய நற்கூலியான)து உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். இன்னும், நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.

8:61 இன்னும், அவர்கள் சமாதானத்திற்கு இணங்கினால், நீர் அதற்கு இணங்குவீராக! அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.