>

உமர் ஷரீஃப் — 165

7:121 “அகிலத்தார்களின் இறைவனை (நாங்களும்) நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினார்கள்.

7:122 ‘‘மூஸா இன்னும் ஹாரூனுடைய இறைவனை” (நம்பிக்கை கொண்டோம்)’

7:123 ஃபிர்அவ்ன் கூறினான்: “உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னர் நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டீர்கள். நிச்சயமாக இந்த நகரத்தில், அதிலிருந்து அதில் வசிப்போரை வெளியேற்றுவதற்காக நீங்கள் சூழ்ச்சிசெய்த சூழ்ச்சிதான் இது. (இதன் தண்டனையை) விரைவில் அறிவீர்கள்.”

7:124 “நிச்சயமாக நான் உங்களை மாறு கை மாறு கால் வெட்டுவேன். பிறகு, உங்கள் அனைவரையும் நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுவேன்.”

7:125 (சூனியக்காரர்கள்) கூறினர்: “நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பக் கூடியவர்கள்.”

7:126 “இன்னும், எங்கள் இறைவனின் அத்தாட்சிகளை - அவை எங்களிடம் வந்தபோது - நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காகவே தவிர எங்களை நீ பழிக்கவில்லை.” “எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையை இறக்கு! இன்னும், முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் பணிந்தவர்களாக) எங்க(ள் உயிர்க)ளை கைப்பற்று!”

7:127 ஃபிர்அவ்னுடைய சமுதாயத்திலிருந்து பிரமுகர்கள் “மூஸாவையும் அவருடைய சமுதாயத்தையும் -அவர்கள் பூமியில் விஷமம் செய்வதற்கும் உன்னையும், உன் தெய்வங்களையும் அவர் (புறக்கணித்து) விட்டுவிடுவதற்கும்- நீ விட்டு விடப்போகிறாயா?” என்று கூறினார்கள். அதற்கு (ஃபிர்அவ்ன்) கூறினான்: அவர்களுடைய ஆண் பிள்ளைகளைக் கொன்று குவிப்போம். அவர்களுடைய பெண் (பிள்ளை)களை வாழவிடுவோம். நிச்சயமாக நாம் அவர்களுக்கு மேல் (என்றும்) ஆதிக்கம் வகிப்பவர்கள்.”

7:128 மூஸா தன் சமுதாயத்திற்கு கூறினார்: “அல்லாஹ்விடம் உதவிதேடுங்கள்! இன்னும், (உறுதியுடன்) பொறுத்திருங்கள்! நிச்சயமாக பூமி அல்லாஹ்விற்குரியதே. அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களை அதற்கு வாரிசாக்குவான். இன்னும், (வெற்றியின் நல்ல) முடிவு அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே.”

7:129 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “(மூஸாவே!) நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் துன்புறுத்தப்பட்டோம்; இன்னும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் துன்புறுத்தப்படுகிறோம்.” அதற்கு (மூஸா) கூறினார்: “உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து, (அவர்களின்) பூமியில் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கக்கூடும். ஆக, நீங்கள் எவ்வாறு (செயல்கள்) செய்கிறீர்கள் (-நடந்து கொள்கிறீர்கள்) என அவன் கவனிப்பான்.”

7:130 திட்டவட்டமாக ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரை அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக பஞ்சங்களினாலும் கனிகளில் (இன்னும், தானியங்களில் விளைச்சல்களை) குறைப்பதாலும் பிடித்தோம்.