உமர் ஷரீஃப் — 142
6:111 (அவர்கள் கோரியபடி) நிச்சயமாக, நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கினாலும்; இன்னும், இறந்தவர்கள் அவர்களிடம் பேசினாலும்; இன்னும், எல்லாவற்றையும் அவர்களுக்கு முன்னால் கண்ணெதிரே ஒன்று திரட்டினாலும், (அவர்கள்) நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை, அல்லாஹ் நாடினால் தவிர. எனினும், நிச்சயமாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
6:112 இவ்வாறே, ஒவ்வொரு நபிக்கும் மனிதர்களிலும், ஜின்களிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக ஆக்கினோம். அவர்களில் சிலர் சிலருக்கு (அவர்களை) ஏமாற்றுவதற்காக அலங்காரமான சொல்லை சொல்லித் தருகிறார்கள். உம் இறைவன் நாடியிருந்தால் அதை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களையும் அவர்கள் பொய்யாக புனைந்து பேசுவதையும் விட்டுவிடுவீராக.
6:113 இன்னும், மறுமையை நம்பாதவர்களுடைய உள்ளங்கள் அதன் பக்கம் செவிசாய்ப்பதற்காகவும்; இன்னும், அதை அவர்கள் திருப்தி கொள்வதற்காகவும்; இன்னும், அவர்கள் செய்(யும்) ப(ல பாவமான)வற்றை செய்வதற்காகவும் (ஷைத்தான்கள் அவர்களை ஏமாற்றினர்).
6:114 “தீர்ப்பாளனாக அல்லாஹ் அல்லாதவரையா நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு மிகத் தெளிவான வேதத்தை இறக்கினான்.’’ (என்று நபியே! கூறுவீராக). இன்னும், (இதற்கு முன்னர்) நாம் எவர்களுக்கு வேதத்தை கொடுத்தோமோ அவர்கள், நிச்சயமாக, இது உண்மையில் (உண்மையான ஆதாரங்களுடன்) உம் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது என்பதை அறிவார்கள். ஆகவே, சந்தேகிப்பவர்களில் ஒருபோதும் ஆகிவிடாதீர்.
6:115 (நபியே!) உம் இறைவனின் வாக்கு (-வேதம்) உண்மையாலும் நீதத்தாலும் முழுமையானதாக இருக்கிறது. அவனுடைய (வேத) வாக்குகளை மாற்றுபவன் அறவே இல்லை. அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
6:116 இன்னும், இப்பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு நீர் கீழ்ப்படிந்தால் (அவர்கள்) உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். (அதிகமானோர்) யூகத்தைத் தவிர (உண்மையை) பின்பற்றமாட்டார்கள். இன்னும், கற்பனை செய்பவர்களாகவே (-பொய்யை பின்பற்றுபவர்களாகவே) தவிர (உண்மையை பின்பற்றுபவர்களாக) அவர்கள் இல்லை.
6:117 (நபியே!) நிச்சயமாக உம் இறைவன், அவனுடைய பாதையிலிருந்து வழிகெடுபவரை மிக அறிந்தவன். இன்னும், அவன் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன்.
6:118 ஆகவே, (அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்டதிலிருந்து புசியுங்கள், நீங்கள் அவனுடைய வசனங்களை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்.