>

உமர் ஷரீஃப் — 131

6:28 (நிலைமை அவர்கள் எண்ணியது போன்று அல்ல!) மாறாக, முன்னர் (அவர்கள்) மறைத்திருந்தவை அவர்களுக்கு (முன்னர்) வெளிப்படும். அவர்கள் (உலகத்திற்கு) திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள் எதை விட்டு தடுக்கப்பட்டார்களோ அதற்கே திரும்புவார்கள். இன்னும், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்.

6:29 இன்னும், அவர்கள் கூறினார்கள்: “நமது உலக வாழ்க்கையைத் தவிர (வேறு) வாழ்க்கை இல்லை. இன்னும், (இந்த வாழ்க்கைதான் எல்லாம். மரணத்திற்கு பின்னர் வேறு வாழ்க்கைக்காக) நாம் எழுப்பப்பட மாட்டோம்.’’

6:30 இன்னும், (அவர்கள்) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்போது நீர் (அவர்களைப்) பார்த்தால், (அப்போது இறைவன், விசாரணை நாளாகிய) இது உண்மை இல்லையா? என்று கூறுவான். அவர்கள், “எங்கள் இறைவன் மீது சத்தியமாக! ஏனில்லை (உண்மைதான்)’’ எனக் கூறுவர். “ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இந்த தண்டனையை சுவையுங்கள்’’ என்று (இறைவன்) கூறுவான்.

6:31 அல்லாஹ்வின் சந்திப்பை பொய்ப்பித்தவர்கள் நஷ்டமடைந்து விட்டனர். இறுதியாக, திடீரென அவர்களுக்கு மறுமை வந்தால், “நாங்கள் (நன்மைகளில்) எவற்றில் குறை செய்தோமோ அதனால் நேர்ந்த எங்கள் துக்கமே!’’ என்று கூறுவர். அவர்களுமோ தங்கள் பாவங்களைத் தங்கள் முதுகுகள் மீது சுமப்பார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டதாகும்.

6:32 உலக வாழ்க்கை இல்லை, விளையாட்டும் கேளிக்கையும் தவிர. அல்லாஹ்வின் அச்சமுள்ளவர்களுக்கு மறுமை வீடுதான் மிக மேலானது. நீங்கள் (இதை சிந்தித்துப்) புரியவேண்டாமா?

6:33 (நபியே!) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உமக்கு கவலையளிக்கிறது என்பதை திட்டமாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பதில்லை. எனினும், அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களைத்தான் (பொய்ப்பித்து) மறுக்கிறார்கள்.

6:34 இன்னும், திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்கள் பொய்ப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும் வரை அவர்கள் பொய்ப்பிக்கப்பட்டதையும் துன்புறுத்தப்பட்டதையும் சகித்து பொறுமையாக இருந்தனர். அல்லாஹ்வின் வாக்குகளை மாற்றுபவர் அறவே இல்லை. இன்னும், தூதர்களின் செய்தியில் பல உமக்கு திட்டமாக வந்துள்ளன.

6:35 (நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெரி(ய சுமையான)தாக இருந்தால், நீ பூமியில் ஒரு சுரங்கத்தை அல்லது வானத்தில் ஓர் ஏணியைத் தேடிச் சென்று, (அதன் மூலம்) ஓர் அத்தாட்சியை அவர்களுக்குக் கொண்டு வருவதற்கு நீர் சக்தி பெற்றால் அப்படி கொண்டு வருவீராக. இன்னும், அல்லாஹ் நாடினால், அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்திருப்பான். ஆகவே, அறியாதவர்களில் நிச்சயம் ஆகிவிடாதீர்.