உமர் ஷரீஃப் — 112
5:24 “மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் காலமெல்லாம் நிச்சயமாக நாங்கள் அதில் அறவே நுழைய மாட்டோம். ஆகவே, நீயும், உம் இறைவனும் (அங்கு) சென்று (அவர்களிடம்) போரிடுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேதான் உட்கார்ந்திருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள்.
5:25 “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கும், என் சகோதரருக்கும் தவிர, (மற்றவர்களை கட்டாயப்படுத்த) அதிகாரம் பெறமாட்டேன். ஆகவே, பாவிகளான சமுதாயத்திற்கு மத்தியிலும் எங்களுக்கு மத்தியிலும் நீ தீர்ப்பளித்து விடு!’’ என்று (மூஸா) கூறினார்.
5:26 “ஆக, நிச்சயமாக அ(ந்த நகரமான)து அவர்கள் மீது தடுக்கப்பட்டுவிட்டது. நாற்பது ஆண்டுகள் (அவர்கள்) பூமியில் திக்கற்று அலைவார்கள். ஆகவே, பாவிகளான மக்கள் மீது நீர் கவலைப்படாதீர்!’’ என்று (மூஸாவுக்கு அல்லாஹ்) கூறினான்.
5:27 (நபியே!) ஆதமுடைய இரு மகன்களின் உண்மையான செய்தியை அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுவீராக. இருவரும் ஒரு குர்பானி (பலி)யைக் கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருவரிடமிருந்து (குர்பானி) ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து ஏற்கப்படவில்லை. (ஏற்கப்படாதவர்) “நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன்’’ என்றார். (ஏற்கப்பட்டவர்) “அல்லாஹ் ஏற்பதெல்லாம் அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்’’ என்று கூறினார்.
5:28 “நீ என்னைக் கொல்வதற்காக உன் கரத்தை என்னளவில் நீட்டினாலும் உன்னைக் கொல்வதற்காக என் கரத்தை உன்னளவில் நான் நீட்டுபவனாக இல்லை. நிச்சயமாக நான் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்.”
5:29 “என்(னை நீ கொலை செய்த) பாவத்தையும், உனது (மற்ற) பாவத்தையும் நீ சுமந்து, நீ நரகவாசிகளில் ஒருவனாக ஆகி விடுவதை நிச்சயமாக நான் நாடுகிறேன். இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்” (என்று கூறி எச்சரித்தார்.)
5:30 ஆக, அவர் தன் சகோதரரை கொலை செய்ய அவருடைய மனம் அவரைத் தூண்டியது. ஆகவே, அவர் அவரைக் கொன்றார். ஆகவே, நஷ்டவாளிகளில் (அவர்) ஆகிவிட்டார்.
5:31 ஆக, தன் சகோதரரின் சடலத்தை எவ்வாறு அவன் மறைப்பான் என்பதை அவனுக்கு அல்லாஹ் காட்டுவதற்காக (இறந்த இன்னொரு காகத்தை புதைக்க) பூமியை தோண்டுகிற ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். அவன், என் நாசமே! (அறிவில்) இந்தக் காகத்தைப் போன்று நான் ஆக முடியாமல் பலவீனமடைந்து விட்டேனா! அப்படி ஆகியிருந்தால் என் சகோதரனின் சடலத்தை மறைத்திருப்பேனே! என்று கூறினான். ஆக, (சதா) வருந்துபவர்களில் அவன் ஆகிவிட்டான்.