×

التوبة

வசனம் 96

அல்-முக்தஸர்

يَحْلِفُونَ لَكُمْ لِتَرْضَوْا۟ عَنْهُمْ ۖ فَإِن تَرْضَوْا۟ عَنْهُمْ فَإِنَّ ٱللَّهَ لَا يَرْضَىٰ عَنِ ٱلْقَوْمِ ٱلْفَـٰسِقِينَ ﴿٩٦﴾

நம்பிக்கையாளர்களே!- பின்தங்கிய இவர்களை நீங்கள் பொருந்திக் கொண்டு அவர்களது சாக்குப் போக்குகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சத்தியம் செய்கின்றனர். அவர்களை நீங்கள் பொருந்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் அவர்களைப் பொருந்திக் கொண்டால் உங்கள் இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்து விடுவீர்கள். நிராகரிப்பினாலும் நயவஞ்சகத்தனத்தாலும் தனக்கு அடிபணியாத சமூகத்தைக் கொண்டு அல்லாஹ் திருப்தியடைய மாட்டான். -முஸ்லிம்களே!- அல்லாஹ் யாரைக் குறித்து திருப்தியடையவில்லையோ அவர்களின் விஷயத்தில் நீங்களும் திருப்தியடைவதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.