×

التوبة

வசனம் 88

அல்-முக்தஸர்

لَـٰكِنِ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ جَـٰهَدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ ۚ وَأُو۟لَـٰٓئِكَ لَهُمُ ٱلْخَيْرَٰتُ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ ﴿٨٨﴾

ஆனால் தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் இவர்களைப் போன்று அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விட்டும் பின்தங்கவில்லை. தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்தார்கள். அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கான கூலி, வெற்றி, போர்ச் செல்வங்கள் போன்ற இவ்வுலகப் பயன்கள் கிடைப்பதும், சுவனத்தில் நுழைந்து தேவையானதைப் பெற்று அஞ்சியவற்றிலிருந்து தப்புவது போன்ற மறுவுலகப் பயன்கள் கிடைப்பதுமாகும்.