×

التوبة

வசனம் 83

அல்-முக்தஸர்

فَإِن رَّجَعَكَ ٱللَّهُ إِلَىٰ طَآئِفَةٍ مِّنْهُمْ فَٱسْتَـْٔذَنُوكَ لِلْخُرُوجِ فَقُل لَّن تَخْرُجُوا۟ مَعِىَ أَبَدًا وَلَن تُقَـٰتِلُوا۟ مَعِىَ عَدُوًّا ۖ إِنَّكُمْ رَضِيتُم بِٱلْقُعُودِ أَوَّلَ مَرَّةٍ فَٱقْعُدُوا۟ مَعَ ٱلْخَـٰلِفِينَ ﴿٨٣﴾

நபியே!- நயவஞ்சகத்தில் நிலைத்திருக்கும் இந்த நயவஞ்சகர்களிடம் அல்லாஹ் உம்மை திரும்ப வரச் செய்து, வேறு போரில் உம்முடன் புறப்படுவதற்காக அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் கூறுவீராக: -“நயவஞ்சகர்களே!- உங்களுக்குத் தண்டனையாக அமையும் பொருட்டும், நீங்கள் என்னுடன் இருந்தால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்குமுகமாகவும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக நீங்கள் என்னுடன் ஒருபோதும் புறப்பட வேண்டாம். நீங்கள் தபூக் போரை விட்டும் பின்தங்குவதை விரும்பினீர்கள். எனவே பின்தங்கிய சிறுவர்கள், பெண்கள் மற்றும் நோயாளிகளுடன் நீங்களும் தங்கிவிடுங்கள்.