×

التوبة

வசனம் 81

அல்-முக்தஸர்

فَرِحَ ٱلْمُخَلَّفُونَ بِمَقْعَدِهِمْ خِلَـٰفَ رَسُولِ ٱللَّهِ وَكَرِهُوٓا۟ أَن يُجَـٰهِدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ فِى سَبِيلِ ٱللَّهِ وَقَالُوا۟ لَا تَنفِرُوا۟ فِى ٱلْحَرِّ ۗ قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا ۚ لَّوْ كَانُوا۟ يَفْقَهُونَ ﴿٨١﴾

அல்லாஹ்வுடைய தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு தபூக் போரை விட்டும் பின்வாங்கிய நயவஞ்சகர்கள் தாம் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியாததையிட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். நம்பிக்கையாளர்கள் போர் புரிவதைப் போல் தங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை வெறுத்தார்கள். தங்களின் சகோதரர்களான நயவஞ்சகர்களை மனம்தளரச் செய்து அவர்களிடம், “வெப்ப காலத்தில் புறப்படாதீர்கள்” என்று கூறினார்கள். தபூக் போர் வெப்ப காலத்தில் நடைபெற்றது -தூதரே!- அவர்களிடம் நீர் கூறுவீராக: “அவர்கள் அறிவார்களானால் நயவஞ்சகர்களுக்காக காத்திருக்கும் நரக நெருப்பு இவர்கள் விரண்டோடும் இந்த வெப்பத்தைவிட அதிக வெப்பமானது.”