அல்-முக்தஸர்
وَعَدَ ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا وَمَسَـٰكِنَ طَيِّبَةً فِى جَنَّـٰتِ عَدْنٍ ۚ وَرِضْوَٰنٌ مِّنَ ٱللَّهِ أَكْبَرُ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ ﴿٧٢﴾
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் மறுமை நாளில் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வதாக அல்லாஹ் வாக்களிக்கிறான். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு மரணம் என்பதே கிடையாது. அவர்களது இன்பங்கள் முடிவடையாது. நிலையான சுவனங்களில் உள்ள அழகிய வசிப்பிடங்களில் அவன் அவர்களை பிரவேசிக்கச் செய்வதாக வாக்களித்துவிட்டான். அவைகள் அனைத்தையும் விட சிறந்தது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் இறைதிருப்தியாகும். மேற்கூறப்பட்ட இந்த வெகுமதிதான் மகத்தான வெற்றியாகும். வேறு எந்த வெற்றியும் இதனை நெருங்க முடியாது.