அல்-முக்தஸர்
كَيْفَ يَكُونُ لِلْمُشْرِكِينَ عَهْدٌ عِندَ ٱللَّهِ وَعِندَ رَسُولِهِۦٓ إِلَّا ٱلَّذِينَ عَـٰهَدتُّمْ عِندَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۖ فَمَا ٱسْتَقَـٰمُوا۟ لَكُمْ فَٱسْتَقِيمُوا۟ لَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَّقِينَ ﴿٧﴾
அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் இணைவைப்பாளர்களுக்கு ஒப்பந்தமோ பாதுகாப்போ இருக்க முடியாது. ஆயினும் மஸ்ஜிதுல் ஹராம் எல்லையில் வைத்து - முஸ்லிம்களே! - உங்களுடன் ஹுதைபிய்யா ஒப்பந்தம் செய்து கொண்டவர்களைத் தவிர. உங்களுக்கும் அவர்களுக்குமிடையிலுள்ள ஒப்பந்தத்தை மீறாமல் அவர்கள் நேர்மையாக இருக்கும் வரை நீங்களும் நேர்மையாக இருங்கள். அதனை மீறி விடாதீர்கள். தன் அடியார்களில் தன் கட்டளைகளைச் செயல்படுத்தி தான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி தன்னை அஞ்சுவோரை அல்லாஹ் நேசிக்கிறான்.