×

التوبة

வசனம் 58

அல்-முக்தஸர்

وَمِنْهُم مَّن يَلْمِزُكَ فِى ٱلصَّدَقَـٰتِ فَإِنْ أُعْطُوا۟ مِنْهَا رَضُوا۟ وَإِن لَّمْ يُعْطَوْا۟ مِنْهَآ إِذَا هُمْ يَسْخَطُونَ ﴿٥٨﴾

தூதரே!-நயவஞ்சகர்களில் சிலர் தர்மப் பொருள்களில் தாங்கள் நாடியதைப் பெறாததனால் உம்மைக் குறைகூறுகிறார்கள். நீர் அவர்கள் விரும்பியதை அவர்களுக்கு அளித்தால் அவர்கள் உம்மைக் கொண்டு திருப்தியடைகிறார்கள். அவர்கள் கேட்பதை நீர் வழங்காவிட்டால் வெறுப்பை வெளியிடுகின்றனர்.