அல்-முக்தஸர்
وَيَحْلِفُونَ بِٱللَّهِ إِنَّهُمْ لَمِنكُمْ وَمَا هُم مِّنكُمْ وَلَـٰكِنَّهُمْ قَوْمٌ يَفْرَقُونَ ﴿٥٦﴾
நம்பிக்கையாளர்களே!- நயவஞ்சகர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் என்று பொய்யாக சத்தியமிட்டுக் கூறுகிறார்கள். அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் என்று தங்களை வெளிப்படுத்தினாலும் அவர்களது உள்ரங்கத்தில் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர். ஆனாலும் இணைவைப்பாளர்கள் கொலை செய்யப்பட்டும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டது போன்று தாங்களும் தண்டிக்கப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சுகிறார்கள். எனவேதான் தப்புவதற்காக வெளிரங்கத்தில் முஸ்லிம்களாக உள்ளனர்.