அல்-முக்தஸர்
وَمِنْهُم مَّن يَقُولُ ٱئْذَن لِّى وَلَا تَفْتِنِّىٓ ۚ أَلَا فِى ٱلْفِتْنَةِ سَقَطُوا۟ ۗ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةٌۢ بِٱلْكَـٰفِرِينَ ﴿٤٩﴾
“அல்லாஹ்வின் தூதரே! போரை விட்டு பின்தங்குவதற்கு எனக்கு அனுமதியளியுங்கள். என்னை உங்களுடன் புறப்படுமாறு கட்டாயப்படுத்தி எதிரிகளின் - ரோமானியரின் - பெண்களால் நான் பாதிக்கப்பட்டு பாவத்தில் விழுந்துவிட காரணமாகிவிடாதீர்கள்” என்று நயவஞ்சகர்களில் சிலர் உம்மிடம் போலியான சாக்குப்போக்குகளைக் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதைவிட பெரும் சோதனைகளான நயவஞ்சகம், போருக்குப் புறப்படாமல் பின்தங்குதல் ஆகியவற்றில் அவர்கள் விழுந்துவிட்டார்கள். மறுமை நாளில் நரகம் நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்திருக்கும். எவரும் அதிலிருந்து தப்பமுடியாது. தப்புவதற்கான எந்த வழியையும் அவர்கள் பெறமாட்டார்கள்.