×

التوبة

வசனம் 47

அல்-முக்தஸர்

لَوْ خَرَجُوا۟ فِيكُم مَّا زَادُوكُمْ إِلَّا خَبَالًا وَلَأَوْضَعُوا۟ خِلَـٰلَكُمْ يَبْغُونَكُمُ ٱلْفِتْنَةَ وَفِيكُمْ سَمَّـٰعُونَ لَهُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّـٰلِمِينَ ﴿٤٧﴾

இந்த நயவஞ்சகர்கள் உங்களுடன் புறப்படாமல் இருப்பதே சிறந்ததாகும். அவர்கள் உங்களுடன் புறப்பட்டால், போரிடச் செய்யாமல் இருப்பதற்கான முயற்சி, சந்தேகங்களைத் தோற்றுவித்தல் போன்றவற்றின் ஊடாக குழப்பத்தையே ஏற்படுத்துவார்கள். உங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த கோல் மூட்டுவதில் விரைவாக ஈடுபடுவார்கள். -நம்பிக்கையாளர்களே!- அவர்கள் பரப்பும் பொய்யைக் கேட்டு அதனை ஏற்றுப் பரப்புவர்களும் உங்களிடையே உள்ளனர். இதனால் உங்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி விடும். நம்பிக்கையாளர்களிடையே சூழ்ச்சிகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தும் நயவஞ்சகம் கொண்ட அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன்.