×

التوبة

வசனம் 44

அல்-முக்தஸர்

لَا يَسْتَـْٔذِنُكَ ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ أَن يُجَـٰهِدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلْمُتَّقِينَ ﴿٤٤﴾

தூதரே! அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் போர் புரியாமல் பின்தங்குவதற்கு உம்மிடம் அனுமதி கோருவது அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களது பண்பல்ல. மாறாக அவர்களைப் புறப்படுமாறு எப்பொழுது நீர் அழைத்தாலும் புறப்பட்டு தமது பொருட்களாலும் உடலாலும் போர்புரிவதே அவர்களது பண்பாகும். தன் அடியார்களில் தன்னை அஞ்சக்கூடியவர்களை அவன் அறிவான். உம்முடன் புறப்படுவதைத் தடுக்கும் தகுந்த காரணங்களின்றி உம்மிடம் அவர்கள் அனுமதிகோர மாட்டார்கள்.