×

التوبة

வசனம் 4

அல்-முக்தஸர்

إِلَّا ٱلَّذِينَ عَـٰهَدتُّم مِّنَ ٱلْمُشْرِكِينَ ثُمَّ لَمْ يَنقُصُوكُمْ شَيْـًٔا وَلَمْ يُظَـٰهِرُوا۟ عَلَيْكُمْ أَحَدًا فَأَتِمُّوٓا۟ إِلَيْهِمْ عَهْدَهُمْ إِلَىٰ مُدَّتِهِمْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَّقِينَ ﴿٤﴾

ஆயினும் உங்களின் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றிய அதில் எந்தக் குறையும் வைக்காத இணைவைப்பாளர்களுடன் நீங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுங்கள். அவர்கள் முந்தைய கட்டளையிலிருந்து விதிவிலக்கானவர்கள். ஒப்பந்த காலம் முடியும் வரை அவர்களின் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களை அவன் நேசிக்கிறான். ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுவது அவனது கட்டளையைச் செயல்படுத்துவதில் உள்ளதாகும். துரோகமிழைப்பது அவனது தடுத்தவைகளில் உள்ளதாகும்.