×

التوبة

வசனம் 34

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ كَثِيرًا مِّنَ ٱلْأَحْبَارِ وَٱلرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَٰلَ ٱلنَّاسِ بِٱلْبَـٰطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ ۗ وَٱلَّذِينَ يَكْنِزُونَ ٱلذَّهَبَ وَٱلْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِى سَبِيلِ ٱللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ﴿٣٤﴾

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மைப்படுத்தி அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்களே! யூத அறிஞர்கள் மற்றும் கிறிஸ்தவ துறவிகளில் பெரும்பாலோர் மக்களின் செல்வங்களை இலஞ்சமாகவும் இன்னபிற வழிகளின் மூலமாகவும் உரிமையின்றிப் பெறுகிறார்கள். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் மக்களைத் தடுக்கிறார்கள். -தூதரே!- தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைத்து, அதில் தம் மீது கடமையான ஸகாத்தை வழங்காதோருக்கு மறுமை நாளில் அவர்களைக் கவலையூட்டும் வேதனைமிக்க தண்டனை உண்டு என்று கூறுவீராக.