அல்-முக்தஸர்
ٱتَّخَذُوٓا۟ أَحْبَارَهُمْ وَرُهْبَـٰنَهُمْ أَرْبَابًا مِّن دُونِ ٱللَّهِ وَٱلْمَسِيحَ ٱبْنَ مَرْيَمَ وَمَآ أُمِرُوٓا۟ إِلَّا لِيَعْبُدُوٓا۟ إِلَـٰهًا وَٰحِدًا ۖ لَّآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۚ سُبْحَـٰنَهُۥ عَمَّا يُشْرِكُونَ ﴿٣١﴾
யூதர்கள் தங்களின் அறிஞர்களையும் கிறிஸ்தவர்கள் தங்களின் சந்நியாசிகளையும் அல்லாஹ்வைத் தவிரவுள்ள கடவுள்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் அல்லாஹ் தடைசெய்ததை அவர்களுக்கு அனுமதிக்கிறார்கள். அவன் அனுமதித்ததை அவர்கள் மீது தடைசெய்கிறார்கள். கிருஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈஸா மஸீஹை அல்லாஹ்வுடன் இறைவனாக்கிக் கொண்டார்கள். யூத அறிஞர்களுக்கும் கிருஸ்தவ துறவிகளுக்கும் உசைருக்கும் மர்யமின் மகன் ஈஸாவுக்கும் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவனை மட்டுமே வணங்குமாறு அவன் கட்டளையிட்டான். அல்லாஹ்வே வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன். இணைவைப்பாளர்கள் கூறுவது போல அவனுக்கு இணைகள் இருப்பதை விட்டும் அவன் தூய்மையானவன்.