×

التوبة

வசனம் 27

அல்-முக்தஸர்

ثُمَّ يَتُوبُ ٱللَّهُ مِنۢ بَعْدِ ذَٰلِكَ عَلَىٰ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ ﴿٢٧﴾

அத்தண்டனைக்குப் பின்னர் நிராகரிப்பு, வழிகேட்டிலிருந்து மீள்வோரை அல்லாஹ் மன்னிப்பான். அவனது பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக் கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எனவேதான் நிராகரிப்பு மற்றும் பாவங்களில் ஈடுபட்ட பிறகும் அல்லாஹ் அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான்.