×

التوبة

வசனம் 23

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوٓا۟ ءَابَآءَكُمْ وَإِخْوَٰنَكُمْ أَوْلِيَآءَ إِنِ ٱسْتَحَبُّوا۟ ٱلْكُفْرَ عَلَى ٱلْإِيمَـٰنِ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ ﴿٢٣﴾

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றுபவர்களே! உங்களின் தந்தையரும் உடன் பிறந்த சகோதரர்களும் ஏனைய உறவினர்களும் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதை விட நிராகரிப்பைத் தேர்ந்தெடுத்தால் அவர்களிடம் முஸ்லிம்களின் இரகசியத்தை வெளிப்படுத்தி அவர்களுடன் ஆலோசனை செய்து, அவர்களை நேசர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தும் யாரேனும் அவர்களிடம் நட்பு கொண்டு அன்பை வெளிப்படுத்தினால் அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு விட்டார். பாவத்தின் காரணமாக தன்னை அழிவில் போட்டு தனக்குத் தானே அநீதி இழைத்துக் கொண்டார்.