அல்-முக்தஸர்
فَسِيحُوا۟ فِى ٱلْأَرْضِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِى ٱللَّهِ ۙ وَأَنَّ ٱللَّهَ مُخْزِى ٱلْكَـٰفِرِينَ ﴿٢﴾
எனவே இணைவைப்பாளர்களே! இப்பூமியில் நான்கு மாதங்கள் நீங்கள் பாதுகாப்பாக நடமாடலாம். அதற்குப் பின்னர் உங்களுக்கு எந்த ஒப்பந்தமும் பாதுகாப்பும் இல்லை. நீங்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தால் உங்களால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் நிராகரிப்பாளர்களை இவ்வுலகில் கொலை, கைது ஆகியவற்றின் மூலமும் மறுமை நாளில் நரகத்தில் நுழைவிப்பதன் மூலமும் இழிவுபடுத்தியே தீருவான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். இதில் ஒப்பந்தங்களை முறித்தவர்களும், காலம் நிர்ணயிக்காமல் பொதுவாக ஒப்பந்தம் செய்தவர்களும் அடங்குவர். காலம் நிர்ணயித்து ஒப்பந்தம் செய்தவர்களின் ஒப்பந்த காலம் நான்கு மாதத்திற்கு அதிகமாக இருப்பின் அந்த காலம் முடியும் வரை ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும்.