அல்-முக்தஸர்
مَا كَانَ لِلْمُشْرِكِينَ أَن يَعْمُرُوا۟ مَسَـٰجِدَ ٱللَّهِ شَـٰهِدِينَ عَلَىٰٓ أَنفُسِهِم بِٱلْكُفْرِ ۚ أُو۟لَـٰٓئِكَ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ وَفِى ٱلنَّارِ هُمْ خَـٰلِدُونَ ﴿١٧﴾
நிராகரிப்பை வெளிரங்கமாகச் செய்வதன் மூலம் தாம் நிராகரிப்பாளர்களே என ஏற்றுக்கொண்டுள்ள இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் ஆலயங்களை பல்வேறுபட்ட வணக்க வழிபாடுகளைக் கொண்டு பராமரிக்க முடியாது. செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனையான ஈமான் இன்மையினால் அவர்களின் செயல்கள் அனைத்தும் வீணாகி விட்டன. மறுமை நாளில், அவர்களில் மரணிக்கும் முன்னரே பாவமன்னிப்புக் கோரியவர்களைத் தவிர மற்றவர்கள் நரகத்தில் நுழைவார்கள். அங்கு நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.