×

التوبة

வசனம் 124

அல்-முக்தஸர்

وَإِذَا مَآ أُنزِلَتْ سُورَةٌ فَمِنْهُم مَّن يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَـٰذِهِۦٓ إِيمَـٰنًا ۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ فَزَادَتْهُمْ إِيمَـٰنًا وَهُمْ يَسْتَبْشِرُونَ ﴿١٢٤﴾

அல்லாஹ் தன் தூதர் மீது ஏதேனும் அத்தியாயத்தை இறக்கினால் நயவஞ்சகர்களில் சிலர் சிலரிடம், “உங்களில் இந்த அத்தியாயம் யாருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தியது” என்று பரிகாசமாகக் கேட்கிறார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரை உண்மைப்படுத்தியவர்களுக்கு இறக்கப்பட்ட அத்தியாயம் அவர்களின் நம்பிக்கையோடு இன்னும் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்கள் இறக்கப்பட்ட வஹியால் அதில் அடங்கியுள்ள உலக மற்றும் மறுமை ரீதியான பயன்களால் மகிழ்ச்சியடைகிறார்கள்.