அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَكُونُوا۟ مَعَ ٱلصَّـٰدِقِينَ ﴿١١٩﴾
அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றி அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். ஈமானிலும் சொல்லிலும் செயலிலும் உண்மையாளர்களுடன் இணைந்திடுங்கள். உங்களுக்கு உண்மையில்தான் வெற்றி அடங்கியுள்ளது.