அல்-முக்தஸர்
فَإِن تَابُوا۟ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ فَإِخْوَٰنُكُمْ فِى ٱلدِّينِ ۗ وَنُفَصِّلُ ٱلْـَٔايَـٰتِ لِقَوْمٍ يَعْلَمُونَ ﴿١١﴾
அவர்கள் நிராகரிப்பிலிருந்து பாவமன்னிப்புக்கோரி, ‘இரு சாட்சியங்களையும் மொழிந்து, தொழுகையைக் கடைப்பிடித்து தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தும் வழங்கினால் அவர்கள் முஸ்லிம்களாகிவிட்டனர். அவர்கள் உங்களின் மார்க்க சகோதரர்களாவர். உங்களுக்குரிய உரிமைகளும் கடமைகளும் அவர்களுக்கும் உண்டு. அவர்களுடன் போரிடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதனால் அவர்களின் உயிர்களும், உடமைகளும், மானங்களும் பாதுகாப்புப் பெற்றவையாகிவிட்டன. அறிந்துகொள்ளும் மக்களுக்கு நாம் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறோம். அவர்கள்தாம் அவற்றைக் கொண்டு பயனடைவார்கள். மற்றவர்களுக்கும் பயனளிப்பார்கள்.