×

الأنفال

வசனம் 75

அல்-முக்தஸர்

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنۢ بَعْدُ وَهَاجَرُوا۟ وَجَـٰهَدُوا۟ مَعَكُمْ فَأُو۟لَـٰٓئِكَ مِنكُمْ ۚ وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَىٰ بِبَعْضٍ فِى كِتَـٰبِ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۢ ﴿٧٥﴾

முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் இஸ்லாத்துக்கு முந்தியவர்களுக்குப் பின்னால் நம்பிக்கை கொண்டவர்களும் நிராகரிப்பாளர்கள் வாழும் நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை நோக்கி புலம்பெயர்ந்தவர்களும் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்து நிராகரிப்பாளர்களின் வாக்கை தாழ்த்துவதற்காக அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்தவர்கள்- நம்பிக்கையாளர்களே! - இவர்களும் உங்களைச் சார்ந்தவர்களே. உங்களுக்குள்ள உரிமைகளும் கடமைகளும் அவர்களுக்கும் உள்ளன. முன்னர் இருந்தது போன்று ஈமான் மற்றும் ஹிஜ்ரத்தின் மூலம் அனந்தரம் பெறுவதை விட அல்லாஹ்வின் சட்டத்தில் அனந்தரம் பெற மிகத் தகுதியானவர்கள் இரத்த உறவுகளே. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தன் அடியார்களுக்கு நன்மையளிக்கக் கூடியதை அறிந்து, அவர்களுக்கு அவன் சட்டங்களை வழங்குகிறான்.