×

الأنفال

வசனம் 73

அல்-முக்தஸர்

وَٱلَّذِينَ كَفَرُوا۟ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍ ۚ إِلَّا تَفْعَلُوهُ تَكُن فِتْنَةٌ فِى ٱلْأَرْضِ وَفَسَادٌ كَبِيرٌ ﴿٧٣﴾

அல்லாஹ்வை நிராகரிப்பவர்களை நிராகரிப்பு ஒன்றிணைக்கிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். நம்பிக்கையாளன் அவர்களுடன் நட்பு கொள்வதில்லை. நீங்கள் நம்பிக்கையாளர்களுடன் தோழமை கொண்டு நிராகரிப்பாளர்களுடன் பகைமை பாராட்டவில்லையெனில் அது நம்பிக்கையாளர்களுக்கு சோதனையாக அமைந்து விடும். அவர்கள் தங்களுக்கு உதவி செய்யக்கூடிய மார்க்க சகோதரர்களைப் பெறமாட்டார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதன் மூலம் உலகில் பெரும் குழப்பம் நிகழும்.