×

الأنفال

வசனம் 68

அல்-முக்தஸர்

لَّوْلَا كِتَـٰبٌ مِّنَ ٱللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَآ أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌ ﴿٦٨﴾

போர்ச் செல்வங்களைப் பெறுவதும், கைதிகளுக்காக பிணைத்தொகை பெறுவதும் ஆகுமானதே என தனது விதியில் ஏற்கனவே அல்லாஹ் தீர்மானித்திருக்காவிட்டால், வஹி இறங்கி அவை அனுமதிக்கப்பட முன்னரே, போர்ச் செல்வங்களையும், கைதிகளிடம் பிணைத் தொகையும் பெற்றுக் கொண்டதற்காக அல்லாஹ்விடமிருந்து கடுமையான வேதனை உங்களை அடைந்திருக்கும்.