அல்-முக்தஸர்
وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ ۚ لَوْ أَنفَقْتَ مَا فِى ٱلْأَرْضِ جَمِيعًا مَّآ أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَـٰكِنَّ ٱللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُۥ عَزِيزٌ حَكِيمٌ ﴿٦٣﴾
உமக்கு உதவி செய்த நம்பிக்கையாளர்களின் பிரிந்து கிடந்த உள்ளங்களை அவன் ஒன்றிணைத்தான். அவற்றை ஒன்றிணைப்பதற்கு நீர் பூமியிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்திருந்தாலும் உம்மால் அவற்றை ஒன்றிணைத்திருக்க முடியாது. ஆயினும் அல்லாஹ்வே அந்த உள்ளங்களிடையே இணைப்பை ஏற்படுத்தினான். அவன் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் அமைத்த விதிகளில், திட்டமிடுவதில், வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.