×

الأنفال

வசனம் 46

அல்-முக்தஸர்

وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَنَـٰزَعُوا۟ فَتَفْشَلُوا۟ وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَٱصْبِرُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّـٰبِرِينَ ﴿٤٦﴾

உங்களது சொல்லிலும் செயலிலும், எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். கருத்துவேறுபட்டு விடாதீர்கள். அது உங்கள் பலவீனத்திற்கும் கோழைத்தனத்துக்கும் பலத்தை இழப்பதற்கும் காரணமாகும். எதிரிகளைச் சந்திக்கும் போது பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் உதவி மற்றும் ஆதரவளித்தல் மூலம் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். யாருடன் அல்லாஹ் இருக்கின்றானோ எவ்வித சந்தேகமுமின்றி அவனே வெற்றியாளன்.