அல்-முக்தஸர்
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ لِيَصُدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ ۗ وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِلَىٰ جَهَنَّمَ يُحْشَرُونَ ﴿٣٦﴾
அல்லாஹ்வை நிராகரித்தோர் தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு மக்களைத் தடுப்பதற்காக செலவு செய்கின்றனர். இதற்குப் பின்பும் செலவளிப்பார்கள். அவர்கள் நினைத்தது நிறைவேறப் போவதேயில்லை. பின்னர் தமது சொத்துக்களை அவர்கள் செலவு செய்ததன் விளைவு கைசேதமே. எனெனில் சொத்துக்களையும் இழந்து அவற்றைச் செலவளித்த நோக்கத்தையும் அடையமுடிவில்லை. பின்னர் அவர்களை நம்பிக்கையாளர்கள் வெற்றி கொள்வதன் மூலம் தோல்விக்குள்ளாவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அதில் நுழையும் அவர்கள் அங்கு நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.